பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

99

பட்டைப்பொத்தனுக்கு திருவான்மூர் ஊரார் நிலம் தானம் செய்ததை ஒரு சாசனம் கூறுகிறது.5

இந்தச் சிற்பத்தில் காணப்படுகிற போர்வீரன், கட்டாரியினால் தொடைச் சதையை யறுப்பதிலிருந்து இவன் கொற்றவைக்கு நவகண்டம் கொடுக்கிறான் என்று கருதலாம். அருகிலிருக்கும் பாரசிவன், வீரன் உறுப்பரிந்து இரத்தக் காணிக்கை கொடுக்கும் போது, மந்திரம் ஒதிச்சடங்கு செய்கிறான் போலும்.

சங்ககாலத்து நூல்களிலே கொற்றவை வணக்கங் கூறப்படுகிறது. தொல்காப்பியம், புறப்பொருள் வெண்பாமலை, சிலப்பதிகாரம் முதலிய நூல்களில் கொற்றவை வணக்கம் கூறப்படுகிறது. பிற்காலத்துத் தக்கயாகப்பரணி, கலிங்கத்துப்பரணி முதலிய நூல்களிலும் இவ் வணக்கம் கூறப்படுகிறது. தமிழரின் இப் பழைய வழக்கத்தைப் பல்லவ அரசரும் மேற்கொண்டிருந்தனர்.

அடிக்குறிப்புகள்

1. முகப்புப் படம் 10 பார்க்க.

2.

3.

4.

5.

6.

காஞ்சிபுரத்தில் உள்ள கருக்கிலமர்ந்தாள் கோயிலிலுள்ள கொற்றவையின் உருவ அமைப்பு, மகாபலிபுரத்துக் கருக்கிலமர்ந்தாள் உருவ அமைப்புப் போன்றதா என்பது தெரியவில்லை. நேரிற் சென்று பார்த்து ஆராய்வதற்கு இயல்வில்லை. வசதியுள்ளவர் ஆராய்ந்து காண்பாராக. முகப்புப் படம் 11 பார்க்க.

கலிங்கத்துப்பரணி, கோயில் பாடியது: 13, 15, கொற்றவைக்குத் தலைப் பலியிடுவதைக் காளிகா புராணத்திலுங் கூறப்படுகிறது என்பார்.

இந்தச் சாசனம் தமிழில் எழுதப்பட்டுள்ளது. நெல்லூர் மாவட்டம் கூடூர்த் தாலுகா மல்லம் என்னும் ஊரில் உள்ள சுப்பிரமணியர் கோயிலுக்கு முன்புறத்தில் உள்ள கல்லில் எழுதப்பட்டிருக்கிறது. இப்போதைய நெல்லூர் மாவட்டத்தின் மத்தியில் பாய்கிற வடபெண்ணையாற்றின் தென்பகுதிகள் முற்காலத்தில் தமிழ்நாடாக இருந்தன. இந்தத் தமிழ்ச் சாசனம் உள்ள, மல்லம் என்று இப்போது பெயர் வழங்கப்படுகிற ஊரின் பழைய தமிழ்ப்பெயர் திருவான்மூர் என்பது.

இந்தச் சாசனம் எழுதப்பட்ட கல்லில், ஒர் ஆள் தலையை அரிந்து எடுத்து அதை ஒரு கையினால் தலைமயிரைப் பிடித்துக் கொண்டிருப்பது போலவும் சிற்பம் சித்திரிக்கப் பட்டிருக்கிறது. இந்தச் சிற்ப உருவம் நவகண்டம் கொடுத்துத் தலையரிந்து பலிகொடுத்த ஒக்கொண்டநாகனைக் குறிக்கிறது போலும். இந்த உருவத்துக்கு மேலே மேற்படி சாசனம் எழுதப்பட்டிருக்கிறது. அதன் வாசகம் இது:-

ஸ்ரீ கம்பபருமற்கு யாண்டு இருபதாவது பட்டை பொத்தனுக்கு ஒக்கொண்ட நாகன் ஒக்கதீந்தன் பட்டைபொத்தன் மெ (தவம்) புரிந்ததென்று படாரிக்கு நவகண்டங் குடுத்து குன்றகத்தலை அறுத்துப் பிடலிகைமேல் வைத்தானுக்கு திருவான்மூர் ஊரார் வைத்த பரிசாவது: எமூர்ப்பறை கொட்டிக் கல்மெடு செய்தாராவிக்குக் குடுப்பாரானார். பொத்தனங் கிழவர்களும் தொறுப்பட்டி நிலங் குடுத்தார்கள். இது அன்றென்றார் கங்கையிடை குமரியிடை எழுநூற்றுக் காவதமும் செய்தான் செய்த பாவத்துப் படுவார். அன்றென்றார் அன்றாள் கோவுக்கு காற்பொன் றண்டப்படுவார்.” S.I.I. Vol. XII. No. 106.