பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 13

தவிராது தடவினர் தமக்குக்

சுவராய்த் தோன்றும் துணிவு போன்றனவே

995

சுவர் சித்திரங்கள் பெரிதும் பயிலப் பட்டிருந்த படியினால் தான். “சுவரை வைத்தல்லலோ சித்திரம் எழுத வேண்டும்" என்னும் பழமொழி வழங்குவதாயிற்று.

“படம்

காவிரிப்பூம் பட்டினத்தில் இருந்த உவவனம் என்னும் பூந்தோட்டம். ஓவியக் கலைஞன் திரைச் சீலையில் அழகுபட எழுதிவைத்த பூந்தோட்டம் போல இருந்தது என்று சீத்தலைச் சாத்தனார் கூறுகிறார்.

66

"வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினைச்

சித்திரச் செய்கைப் படாம் போர்த் ததுவே

யொப்பத் தோன்றிய உவவனம்......’6

6

இதனால், அக்காலத்தில் திரைச்சீலையில் சித்திரம் எழுதும் வழக்கமும் இருந்தது என்பதை யறியலாம். இதை “ஓவிய எழினி” என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.'

கண்ணுள் விளைஞர்

சித்திரக்காரர்கள் கண்ணுள் விளைஞர் என்று கூறப்படு

கின்றனர். என்னை?

"எண்வகைச் செய்தியும் உவமம் காட்டி

நுண்ணிதி னுணர்ந்த நுழைந்த நோக்கிற் கண்ணுள் விளைஞர்.

66

998

பலவகைப்பட்ட கூரிதாக வுணர்ந்த தொழில்களையும் ஒப்புக் காட்டி கூரிய அறிவினையுடைய சித்திர காரிகளும்”

66

“சித்திர மெழுதுவார்க்கு வடிவின் தொழில்கள் தோன்ற எழுதுதற்கு அரிது என்பது பற்றிச் செய்தியும் என்றார். நோக்கினார் கண்ணிடத்தே தம் தொழிலை நிறுத்து தலின் கண்ணுள் வினைஞர் என்றர்” என்பது நச்சினார்க்கினியர் உரை.