பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை -ஓவியம் - அணிகலன்கள் ஓவியம் - அணிகலன்கள் 119

சித்திரகாரப் புலி

கி.பி. 600-முதல் 630 வரையில் அரசாண்டவனும் திருநாவுக்கரசர் காலத்திலிருந்தவனுமான மகேந்திரவர்மன் என்னும் பல்லவ அரசன், தனது சிறப்புப் பெயர்களில் ஓன்றாகச் சித்திரகாரப் புலி என்னும் பெயரைக் கொண்டிருந்தான். இதனால், இவன் சித்திரக் கலையில் வல்லவன் என்று தெரிகிறது. இவன் ஓவிய நூல் ஒன்றுக்கு ஒரு உரை எழுதினான் என்பதை இவ்வரசன், காஞ்சீபுரத்துக் கடுத்த மாமண்டூரில் அமைத்த குகைக் கோயில் சாசனம் கூறுகிறது.

ஓவிய நூல்

மாதவி என்னும் நாடகமகள், பல கலைகளைக் கற்றவள் என்றும் அவற்றில் ஓவியக் கலையையும் பயின்றாள் என்றும் மணிமேகலை கூறுகிறது.

66

'ஓவியச் செந்நூல் உரைநூற் கிடைக்கையும் கற்றுத்துறை போகிய பொற்றொடி மங்கை.”9

அடியார்க்கு நல்லார் காலத்திலும் ஓவியநூல் இருந்தது. அடியார்க்கு நல்லார் ஓவிய நூலைக் குறிப்பிடுகிறதோடு அந்நூலி லிருந்து ஒரு சூத்திரத்தையும் மேற்கோள்காட்டுகிறார்:

66

'ஓவிய நூலுள், நிற்றல் இருத்தல் கிடத்தல் இயங்குதல் என்றும் இவற்றின் விகற்பங்கள் பலவுள: அவற்றுள் இருத்தல்: - திரிதர வுடையனவும் திரிதரவில்லனவு மென இருபகுதிய: அவற்றுள் திரிதரவுடையன - யானை தேர் புரவி பூனை (?) முதலியன; திரிதர ன வில்லன ஒன்பது வகைப்படும். அவை - பதுமுமம், உற்கட்டிதம், ஒப்படி யிருக்கை, சம்புடம், அயமுகம், சுவத்திகம், தனிப்புடம், மண்டிலம், ஏகபாதம் எனவிவை. என்னை?

ս

‘பதுமுக முற்கட் டிதமே யொப்படி

யிருக்கை சம்புட மயமுகஞ் சுவத்திகந்

தனிப்புட மண்டில மேகபாத

முளப்பட வொன்பது மாகுந்

தரிதர வில்லா விருக்கையென்ப.'

என்றாராகலான்

9910