பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 13

ஓவியம் பற்றிய பெயர்கள்

ஓவியத்தை வட்டிகைச் செய்தி என்பர். என்னை? “வட்டிகைச் செய்தியின் வரைந்த பாவையின்” என்பது மணிமேகலை.

வண்ணம் தீட்டாமல் வரைந்த ஓவியத்துக்குப் புனையா ஓவியம் என்று பெயர் கூறப்படுகிறது. இதனை ஆங்கிலத்தில் (Outline Drawing )

என்பர்.

"மனையகம் புகுந்து மணிமே கலைதான் புனையா ஓவியம் போல நிற்றலும்

9911

9912

என்றும். “புனையா ஓவியம் புறம்போந் தென்ன என்றும் மணிமேகலை கூறுகிறது.

"புனையா ஓவியம் கடுப்ப" என்று நெடுநல்வாடை (147) கூறுகிறது. இதற்கு, "புனையா ஓவியம் கடுப்ப-வண்ணங்களைக் கொண்டெழுதாத வடிவைக் கோட்டின சித்திரத்தை யொப்ப” என்று நச்சினார்க்கினியர் உரை எழுதுகிறார்.

ஓவியத் தொழிலுக்கு வட்டிகைச் செய்தி என்னும் பெயரும் உண்டு. வட்டிகை என்பது துகிலிகை.S

13

காவிரிப்பூம்பட்டினத்திதலே, தன் காதலியுடன் அமர்ந்து யாழ் வாசித்துக்கொண்டிருந்த எட்டி குமரன் என்பவன் திடீரென்று ஏதோ சிந்தனையில் ஆழ்ந்து ஓவியம்போன்று அசைவற்றிருந்ததைக் கூறுகிற சீத்தலைச் சாத்தனார் வட்டிகைச் செய்தி (ஓவியப் படம்) போல் இருந்தான் என்று கூறுகிறார்.

66

“தகரக் குழலாள் மன்னொடு மயங்கி

மகர யாழின் வான்கோடு தழீஇ

வட்டிகைச் செய்தியின் வரைந்த பாவையின்

எட்டி குமரன் இருந்தான்.

9914

வட்டிகைப்பலகை என்பது, ஓவியர் ஓவியம் எழுதும் போது வர்ணங்களைக் குழைக்கும் பலகை.

பாலைபாடிய பெருங்கடுங்கோ என்பவர் அரசர் குலத்தில் பிறந்த புலவர். இவர், ஓவியர் சித்திரம் எழுதும் துகிலிகை, பாதிரிப் பூவைப்போல இருக்கும் என்று கூறுகிறார்.