பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை - ஓவியம் ஓவியம் - அணிகலன்கள் 121

66

'ஓவ மாக்கள் ஒள்ளரக் கூட்டிய

துகிலிகை யன்ன துய்த்தலைப் பாதிரி.

என்பது அவர் வாக்கு.

15

சில ஓவியச் செய்திகள்.

கந்தரத்தனார் என்னும் புலவர், அழகிய பெண்மகள் ஒருத்தியை ஓவியக் கலைஞன் எழுதிய பெண் உருவத்திற்கு உவமை கூறுகிறார்:

66

"வல்லோன்

எழுதியன்ன காண்டகு வனப்பின்

ஐயள் மாயோள்.....

என்று அவர் கூறுகிறார்.

16

ஓவியத்தைப் பற்றிச் சீவக சிந்தாமணி காவியத்தில் திருத்தக்க தேவர் குறிப்பிடுகிறார். தோலாமொழித் தேவரும் தமது சூளா மணிக் காவியத்தில் கூறுகிறார். கொங்குவேளிரும் பெருங்கதை என்னும் காவியத்திலே கூறுகிறார்.

கம்பர், தமது இராமாயணத்தில் தமிழ் நாட்டுப் பண்புகளை அமைத்துக் கூறுவது போலவே. இவர்களும் தமது காவியங்களில் தமிழ் நாட்டுக் கலைகள் பலவற்றை இடையிடையே அமைத்துக் கூறுகின்றனர், ஓவியக் கலையைப் பற்றி இவர்கள் கூறுவதைக் காண்போம்.

கொங்குவேளிர் தமது பெருங்கதை என்னும் நூலிலே கூறும் ஓவியத்தைப் பற்றிய செய்திகள் இவை:-

“எண்மெய்ப் பாட்டினுள் இரக்கம் மெய்ந்நிlஇ

66

ஒண்வினை ஓவியர் கண்ணிய விருத்தியுள்

தலையது.

..

9917

'ஒன்பது விருத்தி நற்பதம் நுனித்த ஓவவினை யாளர் பாவனை நிறீஇ

வட்டிகை வாக்கின் வண்ணக் கைவினைக்

கட்டளைப் பாவை.....

"'18

ஓவியக் கலைஞர் நகை, உவகை, அவலம், வீரம் முதலிய எட்டுவகை மெய்ப்பாடுகளையும், இருத்தல் கிடத்தால் நிற்றல் முதலிய ஒன்பது வகையான விருத்திகளையும் தமது சித்திரங்களில் அமைத்து எழுதியதை இப்பகுதிகள் விளக்குகின்றன.