பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 13

குணமாலை என்னும் கன்னிகை தன் தோழியுடன் பல்லக்கு ஏறி வீதி வழியே சென்று கொண்டிருந்தாள். அப்போது, அசனிவேகம் என்னும் பெயருள்ள யானை மதங்கொண்டு, பாகர்க்கு அடங்காமல் வீதி வழியே ஓடிவந்தது. குணமாலையின் பல்லக்தைத் தூக்கிச் சென்றவர் மதயானைக்கு அஞ்சி சிவிகையைக் கீழே வைத்து விட்டு உயிர் தப்பி ஓடிவிட்டார்கள். யானை குணமாலைக்கு அருகில் வந்துவிட்டது. தப்பி ஓட முடியாமல் அவள் அஞ்சி நடுங்கினாள். அப்போது தோழர்களோடு அவ்வழியே வந்த சீவகன், கன்னியின் ஆபத்தைக் கண்டு, யானைப் போரில் பழகியவன் ஆதலின், திடுமென ஓடி, சிங்கம்போல் கர்ச்சித்து, யானையின் முன்பு பாய்ந்து, அதன் இரண்டு கொம்புகளையும் பிடித்து அதன் மதத்தை யடக்கினான். குணமாலை அச்சத்தால் மெய் நடுங்கி நின்றாள்.

அப்போது அவன் அற்செயலாக அவள் முகத்தை

நோக்கினான். அவளுடைய அழகான முகத்தில் அச்சம் என்னும் மெய்ப்பாடு அமைந்திருந்ததைக் கண்டான். இவ்வாறு யானையை யடக்கி, கன்னிகையின் துயரத்தை நீக்கிய பிறகு, சீவகன் தன் இல்லஞ் சென்றான். சென்று, ஓவியக்கலையில் வல்லவனான இவன், யானையின் முன்னிலையில் குணமாலை அஞ்சி நடுங்கிய அச்சம் என்னும் மெய்ப்பாடு தோன்றும் படி ஒரு சித்திரத்தை எழுதினான் என்று திருத்தக்க தேவர் கூறுகிறார். அச்செய்யுள் இது.

66

கூட்டினான் மணிபல தெளித்துக் கொண்டவன்

தீட்டினான் கிழிமிசைத் திலக வாள்நுதல்

வேட்டமால் களிற்றின்முன் வெருவி நின்றதோர் நாட்டமும் நடுக்கமும் நங்கை வண்ணமே.’27

தென்னிந்திய ஓவியம்

தென் இந்திய சித்திரங்கள் பண்டைக் காலத்தில் சிறப்புற்றி ருந்தன. ஹைதராபாத்து இராச்சியத்தின் வடகோடியில் பரத்பூருக்கு அருகில் உள்ள அஜந்தா மலைக்குகை ஓவியங்களும், புதுக் கோட்டை இராச்சியத்தின் சித்தன்னவாசல் குகைக் கோயில் ஓவியங்களும், திருமலைபுரம் மலையடிப்பட்டி ஓவியங்களும், இலங்கை சிகிரியாமலை மதில் ஓவியங்களும் தென்னிந்திய

ஓவியமரபைச்சேர்ந்தவை.