பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 13

சித்தன்னவாசல் ஓவியம் : நடன மங்கை

இந்த ஓவியங்கள் உயிர் உள்ளவையாகக் காணப்படுகின்றன! ஓவியப் புலவன் திறம்பட எழுதிய இந்த ஓவியங்களின் நடன நிலையைக் காணும்போது, காவியப் புலவராகிய திருத்தக்க தேவரின் சீவகசிந்தாமணிச் செய்யுள்கள் நம் நினைவுக்கு வருகின்றன. தேசிகப் பாவை என்பவள் சீவகனுக்கு முன்பாக அரங்கில் நின்று நடனம் டிய காட்சியைக் கூறும் செய்யுட்களோடு இந்த ஓவியங்களின் நடனக் காட்சியை ஒத்திட்டு நோக்குக:

66

“குழலெடுத்து யாத்து மட்டார்

கோதையில் பொலிந்து மின்னும்

அழலவிழ் செம்பொற் பட்டம்

குண்டலம் ஆரம் தாங்கி

நிழலவிர் அல்குற் காசு

சிலம்பொடு சிலம்ப நீள்தோள்

அழகிகூத் தாடு கின்றாள்

99

அரங்கின்மேல் அரம்பை யன்னாள்.

66

வாணுதல் பட்டம் மின்ன

வார்குழை திருவில் வீசப்

பூண்முலை பிறழப் பொற்றோடு

இடவயின் நுடங்க ஒல்கி

மாணிழை வலக்கை தம்மால்

வட்டணை போக்கு கின்றாள்