பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 13

களைக் காண்கிறோம். உலகத்தில் காணப்படுகிற எல்லாப் பிராணி களின் உருவங்களையும் இதில் காணலாம். புல், பூண்டு, மரம், செடி, கொடிகளும் ஆடு, மாடு, மான், யானை, குரங்கு முதலான விலங்குகளும் அன்னம், கிளி, புறா முதலான பறவைகளும் பலவகையானபூக்களும் இந்த ஓவியங்களில் இடம் பெற்றுள்ளன. மனிதர்களில் ஆண், பெண், குழந்தைகள், சிறுவர், சிறுமியர், நடுத்தர வயதினர், கிழவர், உருவங்களும் பலதரமான நிலையில் இருப்பவர் களின் உருவங்களும் புத்தரின் உருவமும் இந்தச் சிற்பங்களில் இடம் பெற்றுள்ளன. உலகப் புகப்பெற்ற அஜந்தா குகை ஓவியங்கள் ஓவியப் பிரியர்களுக்குக் காட்சிவிருந்தாக உள்ளன. அஜந்தா குகைகளும் ஓ வியங்களும் இப்போது நமது அரசாங்கத்தின் பாதுகாப்பில் இருக்கின்றன.

சுவர்ச் சித்திரங்களைப் பார்க்கிறவர் அந்த ஓவியங்களைக் கண்டு மகிழ்கிறார்கள். அவர் கண்ணுக்குச் சுவர் தோன்றுவதில்லை. அருகில் சென்று கையினால் தடவிப் பார்க்கும்போதுதான், ஓவியம் மறைந்து சுவர் தோன்றுகிறது. இந்தச் சுவரையும் சுவர்ச் சித்திரத்தையும் பட்டினத்துப் பிள்ளையார் தம்முடைய திருக்கழுமல மும்மணிக் கோவையில் கூறுகிறார்.

66

"ஓவியப் புலவன் சாயல்பெற எழுதிய

சிற்ப விகற்பம் எல்லாம் ஒன்றில் தவிராது தடவினர் தமக்குச்

சுவராய்த் தோன்றும் துணிவுபோன்றனவே".

நம்முடைய நாட்டுப் பழங்கோயில்களின் சுவர்களிலும் அரண்மனைச் சுவர்களிலும் பழங்காலத்து ஓவியங்கள் எத்தனையோ எழுதப்பட்டிருந்தன. இந்தக் கலைச் செல்வங்கள் எல்லாம் காலப் பழமையினால் மறைந்துபோயின. பல மறைக்கப்பட்டு அழிக்கப் பட்டன. சேர, சோழ, பாண்டிய, பல்லவ, விசயநகர, நாயக்க மன்னர்கள் காலத்துச் சுவர் ஓவியங்கள் எல்லாம் அந்தோ! மறைந்து அழிந்து போய்விட்டன. அவற்றை யெல்லாம் பிரதி எழுதி வைத்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

இக்காலத்தில் சுவர் ஓவியங்கள் மறைந்துவிட்டன. அச்சிடப் பட்ட ஓவியப் படங்களை வீட்டுச் சுவர்களில் தொங்கவிட்டு வீட்டை அழகுபடுத்துகிறோம். படம் என்னும் சொல்லே படாம் என்னும்