பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை

-

ஓவியம் - அணிகலன்கள் 145

சொல்லிலிருந்து தோன்றியது. படாம் என்பதற்குத் துணி என்பது பொருள். சுவரில் ஓவியம் எழுதியதுபோலவே பழங்காலத்தில் படாங்களிலும் (துணிகளிலும்) ஓவியம் எழுதினார்கள். அந்தத் துணிகளுக்குச் சித்திரப் படாம் என்பது பெயர். துணிகளிலே பூக்கள் கொடிகள். முதலியவற்றின் வண்ண ஓவியங்களை எழுதினார்கள். காவிரிப்பூம்பட்டினத்து உவவனம் என்னும் சோலையின் காட்சி, ஓவியக் கலைஞன் துணியில் எழுதி யமைத்த சித்திரப் படாம் போன்று இருந்தது என்று சீத்தலைச்சாத்தனார் மணி மேகலையில் கூறுகிறார்:

66

'வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினைச்

சித்திரச் செய்கைப் படாம்போர்த் ததுவே

ஒப்பத் தோன்றிய உவவனம்’

99

தக்கநாட்டிலே ஆங்காங்கே தாமரைப் பூக்களும் தாமரை இலைகளும் அடர்ந்த குளங்கள் இருந்தன. அந்தக் குளங்களின் காட்சி ஓவியக் கலைஞன் துணியில் எழுதிய தாமரைக் குளத்தின் காட்சிபோல இருந்தன என்று சிந்தாமணிக் காவியப் புலவர் திருத்தக்கதேவர் கூறுகிறார்.

“படம் புனைந்தெழுதிய வடிவில் பங்கயத் தடம்பல தழீஇயது தக்கநாடு

என்பது சிந்தாமணி (கேமசரியார் 28)ச் செய்யுள்.

காவிரிப்பூம்பட்டினத்துக் கடற்கரையில் (நெய்தலங் கானனிலே) ஓவிய எழினியால் அமைக்கப்பட்ட கூடாரத்திலே கோவலனும் மாதவியும் இருந்து கானல்வரி பாடினார்கள் என்று இளங்கோ அடிகள் கூறுகிறார். (எழினி-திரை, ஓவிய எழினி-ஓவியம் எழுதப் பட்டதிரை)

66

‘புன்னை நீழற் புதுமணற் பரப்பில்

ஓவிய எழினி சூழவுடன் போக்கி

விதானத்துப் படுத்த வெண்கால் அமளிமிசைக்

கோவலன் தன்னொடும் கொள்கையின் இருந்தனன் மாமல்லர் நெடுங்கண் மாதவி தானென்”.

(கடலாடு காதை 68-72)

ஆதிகாலத்திலே பட்டுத் துணியை உண்டாக்கினவர் சீனர்கள். பட்டுத் துணிக்கு நூலாக்கலிங்கம் என்று தமிழர் பெயரிட்டனர்.