பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை

-

ஓவியம் - அணிகலன்கள் - 161

ருந்தது. கொற்கைக் கடல், குடாக்கடல் என்பதை யவனர் எழுதி வைத்துள்ள பழைய குறிப்புக்களிலிருந்து அறிகிறோம். கொற்கைக் குடாக்கடலின் சுற்றிலும் கரைமேல் ஆங்காங்கே பரதவர் (மீன் பிடிப்போர்) ஊர்கள் இருந்தன. கொற்கைப் பட்டினமும் இந்தக் குடாக் கடலின் கரைக்கு அருகில் இருந்தது. கொற்கைக் குடாக் கடலில் முத்துச் சிப்பிகளும் இடம்புரி, வலம்புரிச் சங்குகளும் கிடைத்தன. மேலும், கொற்கைப் பட்டினம் துறைமுகப் பட்டினமாகவும் இருந்தபடியால், அயல் நாட்டுக் கப்பல்கள் வாணிகத்தின் பொருட்டு வந்தன. இக்காரணங்களால் கொற்கைப் பட்டினம் செல்வம் படைத்த நகரமாக விளங்கிற்று. மேலும், தாமிரபரணி ஆறு அக்காலத்தில் கொற்கைப் பட்டினத்துக்கு அருகில் கொற்கைக் குடாக்கடலில் சென்று விழுந்தது. ஆறுகள் கடலில் கலக்கிற இடத்தில் முத்துச் சிப்பிகள் அதிகமாக உண்டாயின. பாண்டிநாட்டு இளவரசர்கள் கொற்கைப் பட்டினத்தில் தங்கி வாழ்ந்தார்கள்.

கொற்கையில் உண்டான பாண்டிநாட்டு முத்து உலகப் புகழ் பெற்றிருந்தது. அக்காலத்தில் பாண்டிநாட்டு முத்து பேர் பெற்றிருந்தது. ரோம் தேசத்து நாகரிக மகளிர், பாண்டிநாட்டு முத்துக்களை விரும்பி அணிந்தார்கள்.

பழங்காலத்துத் தமிழ்மகளிர் சிலம்பு என்னும் அணியைக் காலுக்கு அணிந்தார்கள். சிலம்பு குடைச்சலாக அமைக்கப்பட்ட அணி. அதனுள்ளே பரற்கற்களை இட்டிருந்தபடியால் அதனை யணிந்த மகளிர் நடக்கும் போது ஓசையுண்டாகும். பாண்டிய அரசர்களுடைய இராணிகளாகிய பாண்டிமா தேவியர், தாங்கள் அணிந்திருந்த சிலம்புகளினுள்ளே முத்துக்களைப் பரற்கற்களாக இட்டிருந்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது.

கொற்கைக் கடலிலே முத்துக்களும் சங்குகளும் கிடைத்ததைச் சங்க இலக்கியங்களும் கூறுகின்றன. ‘முத்துப்படு பரப்பிற் கொற்கை முன்றுறை' என்று நற்றிணை (23) கூறுகிறது.

"இவர் திரை தந்த ஈர்ங்கதிர் முத்தம்

கவர் நடைப் புரவிக் கால்வடுத் தபுக்கும் நற்றோர் வழுதி கொற்கை முன்றுறை

99

(அகம் 130)

முத்துக் குளிக்கும்போதும் சங்கு குளிக்கும் போதும் சங்கை ஊதி முழங்கித் தெரிவித்தார்கள் என்பதைச் சேந்தங்கண்ணனார் கூறுகிறார்.