பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 13

சேர அரசர்களைப் பற்றிக் கூறுகிற பதிற்றுப் பத்து என்னும் சங்கத் தமிழ் நூலிலே சேரநாட்டில் முத்து உண்டான செய்தி கூறப்படுகிறது. பதிற்றுப்பத்தின் ஏழாம் பத்தில் கபிலர், செல்வக் கடுங்கோ வாழியாதன் என்னும் சேர மன்னனைப் புகழ்ந்து பாடுகிறார். அதில், சேரநாட்டுப் பந்தர் என்னும் ஊர் முத்துக்களுக்கும், கொடுமணம் என்னும் ஊர் பொன் நகைகளுக்கும் பேர் பெற்றிருந்தது என்று கூறுகிறார்:

66

'கொடுமணம் பட்ட நெடுமொழி ஒக்கலொடு

பந்தர்ப் பெயரிய பேரிசை மூதூர்க்

கடனறி மரபில் கைவல் பாண!

தெண்கடல் முத்த மொடுநன்கலம் பெறுகுவை’

என்று (7-ஆம் பத்து, 7-ஆம் செய்யுள்) பாடுகிறார்.

""

இதற்கு உரை எழுதிய பழைய உரையாசிரியர் இவ்வாறு விளக்கம் கூறுகிறார்: “கொடுமணம் என்பது ஒரூர். பந்தர்ப் பெயரிய - பந்தர் என்று பெயர்பெற்ற, கைவல் பாண! நெடுமொழி யொக்கலொடு நீ சான்றோர் பெருமகன் நேரிப் பொருநனாகிய செல்வக் கோமகனைப் பாடிச்செல்லின், பந்தர்ப் பெயரிய மூதூர்த் தெண்கடல் முத்தமொடு கொடுமணம்பட்ட நன்கலம் பெறுகுவை என மாறிக் கூட்டி வினைமுடிவு செய்க.” இவ்வாறு கூறுகின்றமை யால், சங்க காலத்திலே பந்தர் என்னும் ஊர் சேரநாட்டுக் கடற்கரையில் இருந்த தென்பதும் அவ்வூர்க் கடலில் முத்துக் குளிக்கப்பட்ட தென்பதும் தெரிகின்றன.

இதே செய்தியை அரிசில் கிழார் என்னும் புலவரும் கூறுகிறார். பதிற்றுப் பத்து எட்டாம் பத்தில், பெருஞ் சேரலிரும்பொறை என்னும் சேரமன்னனை அரிசில் கிழார் பாடுகிறார். அதில் கொடுமணம், பந்தர் என்னும் ஊர்களைக் கூறுகிறார்.

66

“கொடுமணம் பட்ட விளைமாண் அருங்கலம்

பந்தர்ப் பயந்த பலர்புகழ் முத்தம்

என்று (8-ஆம் பத்து, 4-ஆம் செய்யுள்) கூறுகிறார். இதில் கொடு மணம் என்னும் ஊர் பொன் நகைகளுக்குப் பேர் பெற்றிருந்ததும், பந்தர் என்னும் ஊர் முத்துக்களுக்குப் புகழ்பெற்றிருந்ததும் கூறப் படுகின்றன.