பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை

-

ஓவியம் - அணிகலன்கள் /171

எரிமுகப் பேரம் பேவல் கேட்ப

உமையவள் ஒருதிற னாக வோங்கிய இமையவள் ஆடிய கொடு கொட்டியாடல்'

என்று சிலப்பதிகாரம் இதைக் கூறுகிறது. இதற்கு அடியார்க்கு நல்லார் கூறும் விளக்கம் இது: "தேவர், புரமெரிய வேண்டுதலால் வடவை எரியைத் தலையிலே யுடைய பெரிய அம்பு ஏவல் கேட்ட அளவிலே, அப்புரத்தில் அவுணர் வெந்து விழுந்த வெண்பலிக் குவையாகிய பாரதியரங்கத்திலே, உமையவள் ஒரு கூற்றினளாய் நின்று பாணிதூக்குச் சீர் என்னும் தாளங்களைச் செலுத்த, தேவர் யாரினும் உயர்ந்த இறைவன் சயானந்தத்தால் கைகொட்டி நின்று ஆடிய கொடுகொட்டி என்னும் ஆடல்.

و,

இந்தக் கொடுகொட்டி ஆடலில் சீர்தூக்குப் பாணி என்னும் தாளம் இடம் பெற்றிருந்ததைக் கலித்தொகைக் கடவுள் வாழ்த்துச் செய்யுளுங் கூறுகிறது.

“படுபறை பலவியம்பப் பல்லுருவம் பெயர்த்து நீ கொடுகொட்டி யாடுங்கால் கோடுயர் அகலல்குல் கொடிபுரை நுசுப்பினாள் கொண்ட சீர் தருவாளோ மண்டமர் பலகடந்து மதுகையால் நீ றணிந்து

பண்டரங்க மாடுங்கால் பணைஎழில் அணைமென்றோள் வண்டரற்றும் கூந்தலாள் வளர் தூக்குத் தருவாளோ கொலையுழுவைத் தோலசைஇக் கொன்றைத்தார் சுவல்புரளத் தலையங்கை கொண்டுநீ காபாலம் ஆடுங்கால் முலையணிந்த முறுவலாள் முற்பாணி தருவாளோ”.

இந்த ஆடலுக்கு நான்கு உறுப்புகள் உண்டு.

.

கொடுகொட்டி ஆடலில் உட்கு(அச்சம்), வியப்பு, விழைவு (விருப்பம்), பொலிவு(அழகு) என்னும் நான்கு உறுப்புக்கள் உண்டு என்பதைக் கூறுகிற ஒரு பழைய செய்யுளை நச்சினார்க்கினியர் கலித்தொகை உரையில் மேற்கோள் காட்டுகிறார்.

66

'கொட்டி யாடற் றோட்டம் ஒட்டிய

உமையவள் ஒருபா லாக ஒருபால் இமையா நாட்டத்து இறைவன் ஆகி

அமையா உட்கும் வியப்பும் விழைவும்