பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 13

பொலிவும் பொருந்த நோக்கிய தொக்க

அவுணர் இன்னுயிர் இழப்ப அக்களம் பொலிய ஆடினன் என்ப”

என்பது அச்செய்யுள்.

சேரன் செங்குட்டுவன் தன்னுடைய அரசியோடு ஆடகமாடம் என்னும் அரண்மனையில் மாலை நேரத்திலே நிலா முற்றத்தில் அமர்ந்திருந்தான். அவ்வமயம் கூத்துக் கலையில் பெயர் பெற்ற பறையூர்க் கூத்தச்சாக்கையன் தன்னுடைய மனைவியுடன் வந்து, இருவரும் சிவபெருமான் உமையவள் போன்று வேடம் புனைந்து, இந்தக் கொட்டிச் சேதம் என்னும் ஆடலை ஆடினார்கள். இந்த ஆடலைச் செங்குட்டுவ மன்னன் தேவியுடன் கண்டு மகிழ்ந்தான் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.

66

திருநிலைச் சேவடிச் சிலம்பு புலம்பவும்

பரிதரு செங்கையில் படுபறை ஆர்ப்பவும் செஞ்சடை சென்று திசைமுகம் அலம்பவும் பாடகம் பகையாது சூடகம் துளங்காது மேகலை ஒலியாது மென்முலை யசையாது வார்குழை ஆடாது மணிக்குழல் அவிழாது உமையவள் ஒருதிற னாகஓங்கிய இமையவள் ஆடிய கொட்டிச் சேதம்

பார்தரு நால்வகை மறையோர் பறையூர்க் கூத்தச் சாக்கையன் ஆடலின் மகிழ்ந்து”.

என்பது அப்பாடற் பகுதி.

ஆடல்.

குடைக் கூத்து: இது முருகன் அவுணரை வென்ற போது ஆடிய

"படைவீழ்த் தவுணர் பையுள் எய்தக்

குடைவீழ்த் தவர்முன் ஆடிய குடை

என்பது சிலப்பதிகாரம்.

66

'அவுணர் தாம் போர் செய்தற்கு எடுத்த படைக்கலங்களைப் போரிற்கு ஆற்றாது போகட்கு வருத்தமுற்ற வளிவிலே, முருகன் தன் குடையை முன்னே சாய்த்து அதுவே ஒருமுக எழினியாக நின்றாடிய குடைக்கூத்து” என்பது அடியார்க்கு நல்லார் உரை.