பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை

-

ஓவியம் - அணிகலன்கள் /175

வாணனுடைய சோ நகரத்தில் சென்று பேடியுருவங்கொண்டு ஆடிய ஆடல்.

66

ஆண்மை திரிந்த பெண்மைக் கோலத்துக் காமன் ஆடிய பேடி யாடல்'

என்று இதைச் சிலப்பதிகாரம் கூறுகிறது.

66

'ஆண்மைத் தன்மையிற் றிரிந்த பெண்மைக் கோலத்தோடு காமனாடிய பேடென்னும் ஆடல். இது தனது மகன் அநிருத்தனைச் சிறைமீட்டுக் காமன் சோ நகரத்தாடியது” என்பது அடியார்க்கு நல்லார்

உரை.

இது நான்கு உறுப்புக்களை யுடையது.

காவிரிப்பூம்பட்டினத்திலே இந்திர விழா நடந்த போது அந்நகர வீதிகளில் பலப்பல காட்சிகள் காணப்பட்டன என்றும் அவற்றில் பேடிக் கூத்தும் ஒன்று என்றும் மணிமேகலை கூறுகிறது.

66

"சுரியற் றாடி மருள்படு பூங்குழல்

பவளச் செவ்வாய்த் தவள வொண்ணகை

ஒள்ளரி நெடுங்கண் வெள்ளிவெண் டோற்றுக் கருங்கொடிப் புருவத்து மருங்குவளை பிறைநுதல்

காந்தளஞ் செங்கை யேந்திள வனமுலை

அகன்ற அல்குல் அந்நுண் மருங்குல்

இகந்த வட்டுடை எழுதுவரிக் கோலத்து வாணன் பேரூர் மறுகிடை நடந்து

நீள்நிலம் அளந்தோன் மகன் முன்னாடிய

பேடிக் கோலத்துக் பேடுகாண் குநரும்.

என்பது மணிமேகலை. (மலர்வனம்புக்க காதை 116- 126)

மரக்கால் ஆடல் : மாயோளாகிய கொற்றவை முன் நேராகப் போர் செய்யமுடியாத அவுணர், வஞ்சனையால் வெல்லக் கருதிப் பாம்பு, தேள் முதலியவற்றைப் புகவிட, அவற்றைக் கொற்றவை மரக்காலினால் உழக்கி ஆடிய ஆடல் இது.

"காய்சின அவுணர் கடுந்தொழில் பொறாஅள் மாயவள் ஆடிய மரக்கால் ஆடல்

என்று இதனைச் சிலப்பதிகாரம் கூறுகிறது.