பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாட்டியக் கலை*

பாரத தேசத்திலே மிகப் புகழ் பெற்றது தமிழர் வளர்த்த பரத நாட்டியம். இந்திய நடனங்களிலே தலைசிறந்தது பரத நாட்டியம் என்று து புகழப்படுகிறது. தமிழருடைய இந்த நாட்டியக் கலையை இப்போது பாரத தேசத்திலும் பல நாடுகளிலும் கற்று வருகிறார்கள். மேல் நாட்டார் சிலரும் இந்தக் கலையைக் கற்று வருகிறார்கள். இந்தக் கலையை ஆதியில் உண்டாக்கி வளர்த்துப் பாதுகாத்து வருகிறவர் தமிழரே. நட்டுவர் என்று கூறப்படுகிறது தலைக்கோல் ஆசான்கள் சோழநாட்டுத் தஞ்சாவூரிலே இக்கலையை வளர்த்தார்கள். இவர்கள் இந்தக் கலையைக் கற்றுங் கற்பித்தும் வருகிறார்கள். தேவதாசிகள் என்றும் தேவரடியார் என்றும் பெயர் பெற்ற ஆடல் மகளிர், பரத நாட்டியக் கலையைப் பயின்று, கோயில்களிலும் பிற இடங்களிலும் ஆடினார்கள். அக்காலத்தில் அவர்களைத் தவிர ஏனையோர் பரதநாட்டியம் ஆடியதில்லை. கோயில்களில் தேவதாசிகள் கூடாது என்ற சட்டம் வந்த பிறகு, பரதநாட்டியக் கலையை 'உயர்ந்த சாதி' என்று சொல்லிக் கொள்கிறவர்கள் தங்கள் மகளிர்க்குக் கற்பித்து ஆடிவருகின்றார்கள்.

பரதநாட்டியத்தைப் பற்றி தமிழிலும் சமஸ்கிருதத்திலும் நூல்கள் உள்ளன. வடமொழியில் பரதநாட்டியம் பற்றி எழுதப்பட்டிருப்ப தனாலே இது வடஇந்தியக் கலை என்றோ வடநாட்டவருக்குரிய கலையென்றோ கருதுவது தவறு. இடைக் காலத்திலே சமஸ்கிருதம், படித்தவர்களின் பொது மொழி என்று கருதப்பட்ட காலத்திலே, பல கலை நூல்கள் சமஸ்கிருதத்திலே மொழி பெயர்க்கப்பட்டன. அவ்வாறு மொழி பெயர்க்கப்பட்ட நூல்களிலே பரத நாட்டியமும் ஒன்று. தமிழ்நாட்டிலே தொன்று தொட்டு நாட்டியக் கலை வளர்க்கப்பட்டு வருகிறது.

  • நுண்கலைகள் (1967) எனும் நூலில்இடம் பெற்றுள்ள கட்டுரை.