பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 13

5. கற்கடகம்

66

10. உற்சங்கம்

'எஞ்சுதல் இல்லா இணைக்கை யியம்பில்

15. வருத்தமானம்

அஞ்சலி தன்னொடு புட்பாஞ் சலியே

பதுமாஞ் சலியே கபோதங் கற்கடம் நலமாஞ் சுவத்திகம் கடகாவருத்தம் நிடதம் தோரமுற் சங்கம் மேம்பட வுறுபுட் பபுடம் மகரம் சயந்தம் அந்தமில் காட்சி யபய வத்தகம்

எண்ணிய வருத்த மானந் தன்னொடு

பண்ணுங் காலைப் பதினைந் தென்ப”.

(அடியார்க்கு நல்லார் உரைமேற்கோள். சிலம்பு, அரங்கேற்று காதை. 18-ஆம் அடி உரை.)

இந்த முத்திரைகளின் அமைப்பு விபரத்தையும் இவற்றின் பொருளையும் அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரையில் விளக்கமாக எழுதியுள்ளார். அவற்றை அங்குக் காண்க.

சிலப்பதிகாரத்தின் அரும் பதவுரையாசிரியரான பழைய உரைகாரர், ஒற்றைக்கை பதாகை முதலாக இருபத்து நான்கு என்றும், இரட்டைக்கை அஞ்சலி முதலாகப் பதின்மூன்று என்றும் கூறுகிறார். அவருக்குப் பிற்காலத்தவரான அடியார்க்கு நல்லார், ஒற்றைக்கை முப்பத்து மூன்று என்றும் இரட்டைக்கை பதினைந்து என்றும் கூறுகிறார். ஒற்றைக்கை 24 ஆக இருந்தது 33 ஆனதும், இரட்டைக்கை 13 ஆக இருந்தது 15 ஆக ஆனதும் பிற்காலத்து வளர்ச்சியைக் காட்டுகிறது. சமஸ்கிருத பரத சாஸ்திர நூல்கள் பிற்காலத்து வளர்ச்சியாகிய 33 ஒற்றைக் கைகளையும் 15 இரட்டைக் கைகளையும் கூறுகின்றன. எனவே, சமஸ்கிருத பரத சாஸ்திரம் பிற்காலத்தில் தமிழிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது என்பது தெரிகிறது.

பரத நாட்டியத்தில் கை முத்திரைகளைப் போலவே முகம், கண், புருவம், கால் முதலிய உறுப்புக்களினாலும் காட்டும் குறிப்புக்கள் உண்டு. ஆடல் மகளிர் கையாலும் காலாலும் புருவத் தாலும் கண்ணாலும் தாளத்தையும் செலவையும் இசையையும் கருதிக் கொண்டு நாட்டியம் ஆடினார்கள். இவற்றைப்பற்றிப் பரத சாத்திர