பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை

-

ஓவியம் -அணிகலன்கள்

181

நூல்களில் காண்க. மற்றும் அலாரிப்பு, ஜெதிசுரம், சப்தம், வர்ணம், பதம், தில்லானா முதலியவைகளைப் பற்றியும் விரிவான நூல்களில் கண்டு கொள்க.

கூத்துக் கலை பயின்று தேர்ச்சிபெற்ற நாடக மகளிர் தலைக்கோலி என்னும் பட்டத்தைப் பெற்றார்கள். அவர்களுக்குத் தலைக்கோல் அரிவை என்றும் பெயர் உண்டு. ஆடல் ஆசிரியர் தலைக்கோல் ஆசான் என்னும் பட்டம் பெற்றனர்.

கூத்துக்கலையை ஆடிமுதிர்ந்த மகளிர் தோரிய மடந்தை என்றும் தலைக்கோல் அரிவையர் என்றும் பெயர் பெற்றனர். ஆடி முதிர்ந்த இவர்கள், பாடல் மகளிராக, ஆடல் மகளிர் காலுக்கு ஒற்றறுத்துப் பாடுவர்.

தமிழ் நாட்டிலே தொன்றுதொட்டு ஆடற்கலையில் தேர்ந்த தலைக்கோலிகள் பற்பலர் இருந்தார்கள். அவர்களுடைய பெயர் களும் வரலாறுகளும் தொடர்ந்து கிடைக்கவில்லை. கடைச்சங்க காலத்தில் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்தவள் பெயர்பெற்ற மாதவி என்பவள். அவள் ஆடற்பாடற் கலை களில் தேர்ச்சி பெற்று அரங்கேறிய போது, சோழன் கரிகால்வளவன் அவளுக்கு 1008 கழஞ்சுபொன் மதிப்புள்ள பொன் மாலையையும் தலைக்கோலி என்னும் பட்டத்தையும் கொடுத்துச் சிறப்புச் செய்தான் என்று சிலப்பதிகார காவியம் கூறுகிறது.

கல்வெட்டெழுத்துச்

சாசனங்களிலிருந்து ஆடற்பாடற் கலைகளைப் பயின்ற மகளிர் தலைக்கோலிப் பட்டம் பெற்றிருந்ததை அறிகிறோம்.

நக்கன் உடைய நாச்சியார் என்னும் பெண்மணி ஞான சம்பந்தத் தலைக்கோலி என்று பெயர் பெற்றிருந்ததை ஒரு சாசன எழுத்துக் கூறுகிறது.

ஐயாறப்பர் கோவிலின் பழைய பெயர் ஒலோக மாதேவீச்சரம் என்பது. முதலாம் இராசராசனின் அரசியரில் ஒருவர் ஒலோக மாதேவியார். அவ்வரசியின் பெயரால் கட்டப்பட்ட படியால் க்கோவிலுக்கு அப்பெயர் வழங்கிற்று. அந்தக் கோவிலில் ஐயாறன்