பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 13

கலியுகச் சுந்தரத் தலைக்கோலி என்னும் சிறப்புப் பெயர் பெற்றவள் இருந்தாள். அவள், ஆடல் பாடல்களில் வல்லவர்களான முப்பது மகளிர்க்குத் தலைவியாக இருந்தாள் என்று அக்கோயில் கல்வெட் டழுத்துக் கூறுகிறது.

நக்கன் பிள்ளையாள்வி என்பவள் நானாதேசி தலைக்கோலி என்னும் பட்டம் பெற்றிருந்தாள். நக்கன் உலகுடையாள் என்பவள் தேவகன் சுந்தரத் தலைக்கோலி என்னும் பட்டம் பெற்றிருந்தாள். சோழ தலைக்கோலி என்பவளை இன்னொரு சாசனம் கூறுகிறது.

உறவாக்கின தலைக்கோலி என்னும் பெயருள்ளவள் திருவொற்றியூரில் இருந்தாள். திருவொற்றியூர் இராசராசன் மண்டபத்தில், இராசராசசோழன் (111) முன்னிலையில் இவள் அகமார்க்கப் பாட்டைப் பாடினாள். இதன் பொருட்டுச் சோழன் இவளுக்கு 60 வேலி நிலத்தை மணலி கிராமத்தில் தானம் செய்தான்.

ஆடற் கலையில் தேர்ந்த ஒருத்தி ஐஞ்ஞூற்றுத் தலைக்கோலி என்று பெயர் பெற்றிருந்தாள்.

எம்மண்டலமும் கொண்டருளிய குலசேகர தேவர் என்னும் பாண்டியன், நக்கன் செய்யாள் என்னும் நாட்டிய நங்கைக்குக் காலிங்கராய்த் தலைக்கோலி என்னும் பட்டத்தையும் நக்கன் நாச்சியார் என்னும் நங்கைக்குத் தனி ஆணையிட்ட பெருமாள் தலைக்கோலி என்னும் பட்டத்தையும் வழங்கியதை ஒரு சாசனம் கூறுகிறது.

நக்கன் நல்லாள் என்பவள் மூவாயிரத் தலைக்கோலி என்னும் பெயர்பெற்றிருந்தாள். நக்கன் வெண்ணாவல் என்பவள் தில்லை அழகத் தலைக்கோலி என்னும் பட்டம் பெற்றிருந்ததைத் திருச்சி அல்லூர் பஞ்சநதீசுவரர் கோவில் சாசனம் கூறுகிறது.

உலக முழுதுடையாள் என்னும் பெயருள்ள ஆடல் மங்கை சாந்திக்கூத்தி சொக்கட்டாயாண்டார் என்று சிறப்புப் பெயர் பெற்றிருந்ததைத் திருநெல்வேலி வள்ளியூர்ச் சாசனங் கூறுகிறது. இவ்வாறு நூற்றுக்கணக்கான தலைக்கோலியர் பெயர்களில், மறைந்து மறந்து போனவை நீங்கலாகச் சிலர் பெயர்கள் மட்டும் சாசன எழுத்துக்களிலிருந்து கிடைத்துள்ளன. இந்தச் சிறப்புப் பெயர்கள்,