பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை

-

ஓவியம் - அணிகலன்கள்

183

அக்காலத்தில் அரசரும் செல்வரும் நாட்டியக் கலைஞரைப் போற்றிச் சிறப்புச் செய்ததைக் காட்டுகின்றன.

கூத்துக்கலை (நாட்டியக்கலையைப் பற்றிப் பல கலை நூல்கள் இருந்தன. அவற்றில் பல இப்போது மறைந்து விட்டன. அந்நூல்களில் சிலவற்றின் பெயரை மட்டுங் கூறுகிறோம். அவை: பரதசேனாபதியம், செயற்றியம், சயந்தம், விளக்கத்தனார் கூத்து, மதிவாணனார் நாடகத் தமிழ்நூல், செயன்முறை, குணநூல், கூத்தநூல், பரதம், முறுவல் நூல், பொய்கையார் நூல் முதலியவை.