பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை

-

ஓவியம் - அணிகலன்கள்

185

தார்கள். (பிற்காலத்தில் பாணர் தீண்டப்படாதவராக ஒடுக்கப்பட்டுத் தாழ்ந்த நிலையையடைந்தார்கள். பழங்காலத்தில் பாணர் தமிழ்ச் சமூகத்திலே சமநிலையைப் பெற்றிருந்தார்கள்.) நாடகங்களைப் பாணர் களே நடித்தபடியால் நாடகங்கள் அவர்களிடத்திலே இருந்தன. நாடக நூல்களைப் பொதுமக்கள் படிக்கவில்லை. நடித்துக் காட்டிய பாணர்களிடமே அந்நூல்கள் இருந்தன. சமஸ்கிருத மொழியில் நாடக நூல்களைப் படிப்பதற்கும், நடிப்பதற்கும் எழுதப்பட்ட படியால் அந்த மொழியில் நாடகநூல்கள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் நாடகக்கலை பழங்காலத்திலேயே வளர்ந்திருந்த போதிலும் அவற்றைப் பாணர் என்னும் இனத்தார்மட்டும் நடித்தமையாலும், நாடக நூல்கள் அவர்களிடத்தில் மட்டும் இருந்தமையாலும் பிற்காலத்தில் அவர்கள் சமூகத்திலே தாழ்த்தப்பட்டு இழிநிலையடைந்த போது அவர்களிடமிருந்த நாடக நூல்கள் அழிந்து போயின. அதுமட்டு மல்லாமல், பிற்காலத்தில் தமிழகத்தில் உண்டான அயல் நாட்டாட்சியும் நாடகக் கலைக்கு அழிவைத் தந்தது. பாணர்கள் நடித்த நாடகங்களின் பெயர்கள்கூட மறைந்துவிட்டன.

கல்வெட்டெழுத்துச்

சில நாடகங்களின் பெயர்கள் சாசனங்களிலிருந்து அறியப்படுகின்றன. முதலாம் இராசராச சோழன் தஞ்சாவூரில் பெருவுடையார் கோயிலைக் கட்டினபிறகு, அக்கோவில் வைகாசிப் பெரிய திருவிழாக் காலத்தில் இராஜராஜேசுவர நாடகம் ஆண்டுதோறும் நடிக்கப்பட்டது. இந்த நாடகத்தை நடிக்கும், விஜயராஜேந்திர ஆசாரியன் என்னும் சிறப்புப்பெயர் பெற்றிருந்த திருவாலந்திருமுது குன்றன் அமர்த்தப்பட்டான். அவனுடைய பரம்பரையார் அந்த நாடகத்தைத் தொடர்ந்து நெடுங்காலம் நடத்தி வந்தார்கள். இதுபற்றிச் சோழ அரசனடைய கல்வெட்டெழுத்துச் சாசனம் கூறுகிறது. குறிகள் இவை: "...உடையார் ஸ்ரீ ராஜராஜேசுவர முடையார் கோயிலிலே ராஜராஜேசுவர நாடகமாட நித்தம் நெல்லுத் தூணியாக நிவந்தஞ் செய்த நம்வாய்க் கேழ்விப்படி சாந்திக் கூத்தன் திருவாலன் திருமுது குன்றனான விஜயராஜேந்திர ஆசார்யனுக்கும் இவன் வம்சத்தாருக்கும் காணியாகக் கொடுத்தோமென்று.... கல்வெட்டியது, திருவாலந் திருமுது குன்றனான விஜயராஜேந்திர ஆசாரியன் உடையார் வைகாசிப் பெரிய திருவிழாவில் ராஜராஜேசு வர நாடகமாட இவனுக்கும் இவன் வம்சத்தார்க்கும் காணியாகப் பங்கு ஒன்றுக்கும் இராஜகேசரியோடொக்கும் ஆடவல்லானென்னும்