பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 13

மரக்காலால் நித்தம் நெல்லுத் தூணியாக நூற்றிருபதின் கல நெல்லும் ஆண்டாண்டுதோறும் தேவர் பண்டாரத்தே பெறச் சந்திராதித்தவர் கல்வெட்டித்து.

இந்த ராஜராஜேசுவர நாடகம் இந்தக் கோவிலில் நெடுங்கால மாகத் தொடர்ந்து நடந்துவந்தது. பிற்காலத்திலே மகாராட்டிர அரசர் தஞ்சாவூரைக் கைப்பற்றி அரசாண்ட காலத்தில் இந்த நாடகம் ஆடுவது நிறுத்தப்பட்டது. இந்த நாடகத்தின் ஏட்டுச்சுவடி இந்தப் பரம்பரை யாரிடத்தில் இருந்திருக்க வேண்டுமல்லவா? இந்தப் பரம்பரையோடு இந்நூலும் மறைந்து போயிற்று.

தென் ஆர்க்காடு மாவட்டம் கூடலூர் தாலுகா திருப்பாதிரிப் புலியூரில் உள்ள பாடலிபுரேசுவரர் கோவிலில், முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் எழுதப்பட்ட கல்வெட்டெழுத்துச் சாசனம் பூம்புலியூர் நாடகத்தைக் கூறுகிறது. வீரைத் தலைவனான பரசமய கோளரி மாமுனி என்பவர் இந்த நாடகத்தை எழுதினார் என்றும் இதன்பொருட்டு இவருக்குப் பாலையூரில் நிலம் தானமாகக் கொடுக்கப்பட்டது என்றும் இந்தச் சாசனம் கூறுகிறது. இந்தப் பூம்புலியூர் நாடகமும் கிடைக்கவில்லை.

திருநெல்வேலி மாவட்டம் திருச்செந்தூர்த் தாலுகா ஆத்தூரிலுள்ள சோமநாத ஈசுவரர் கோயில் கல்வெட்டுச் சாசனம், அந்தக் கோயிலில் அழகிய பாண்டியன் கூடம் என்னும் நாடக சாலை இருந்ததென்றும் இங்குக் கூத்தும் நாடகமும் நடந்தது என்றும் கூறுகிறது. மேலும் திருமேனி பிரியாதான் என்னும் நாடக ஆசிரியன் திரு நாடகம் என்னும் நாடகத்தை இந்த மண்டபத்தில் ஆடினான் என்றும் இதைத் தொடர்ந்து ஆடுவதற்காகப் பாண்டிய மன்னன் இவனுக்கும் இரண்டு மா நிலத்தைத் தானமாகக் கொடுத்தான் என்றும் இந்தச் சாசனம் கூறுகிறது. இந்த நாடகநூலும் நமக்குக் கிடைக்கவில்லை. இவ்வாறு எத்தனை நாடக நூல்கள் மறைந்து போயினவோ, யாருக்குத் தெரியும்? முத்தமிழில் ஒன்றான நாடகத் தமிழை வளர்த்த தமிழர் நாடக நூல்களை எழுதாமலா இருப்பர்? அவர்கள் எழுதின நாடக நூல்கள் அவைகளை நடிப்பதற்காக இருந்த பரம்பரையாரிடத்தில் மட்டும் இருந்த படியால் அந்த நூல்கள் மற்றவருக்குக் கிடைக்காமல் அந்தப் பரம்பரையோடு மறைந்து விட்டன. ஆனால், பழங்காலத்தில் எழுதப்பட்ட நாடக இலக்கண