பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை

-

ஓவியம் - அணிகலன்கள்

187 நூல்களின் சூத்திரங்கள் சிலபல கிடைத்துள்ளமையால் நாடக நூல்களும் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. நாடக இலக்கியம் இல்லையானால் நாடக இலக்கணம் ஏன் எழுதினார்கள்? இலக்கியம் இருந்தால் தானே இலக்கணம் உண்டாகும்? நாடக இலக்கியம் இல்லை என்றால் நாடக இலக்கணம் எதற்காக? நாடக நூல்களும், நாடக இலக்கண நூல்களும் பழங்காலத்தில் எழுதப்பட்டி ருந்தன என்பதற்குப் பல சான்றுகள் காணப்படுகின்றன. தமிழ்நாடக அமைப்பில் காணப்படுகிற வியப்புச் செய்தி என்னவென்றால், தமிழ் நாடகங்களின் பிரிவுகள் ஐந்து அங்கங்களாகப் பிரிக்கப்பட்டதைப் போலவே, நாடகக்கலைஞர் ஷேக்ஸ்பியர் எழுதிப் பெயர்பெற்ற நாடகங்கள் எல்லாம் ஐந்து அங்கங்களாக (ஆக்ட்டுகளாக)ப் பிரிக்கப் பட்டிருப்பதுதான். விதிவிலக்காக ஷேக்ஸ்பியரின் சில நாடகங்கள் ஏழுபிரிவுகளாக (ஆக்ட்டு)ப் பிரிக்கப்பட்டிருந்தாலும் அவருடைய பெரும் பாலான நாடகங்கள் ஐந்து அங்கங்களையே கொண்டுள்ளன.

தமிழில் இருந்த பழைய நாடக இலக்கண நூல்களில் பல மறைந்துபோனாலும் சிலநாடக இலக்கண நூல்களின் சூத்திரங்கள் போதுமான அளவு கிடைத்துள்ளன. கிடைத்துள்ள நாடக இலக்கண சூத்திரங்களைக்கொண்டு புதிய நாடக நூல்களை எழுதியமைக்கலாம். மேலும், பழைய மரபையும் புதிய மரபையும் ஒட்டி அண்மைக் காலத்தில் திரு. பருதிமாற் கலைஞன் எழுதிய நாடகத் தமிழ்நூலும், முத்தமிழ்ப் பேராசிரியர் அருட்டிரு விபுலானந்த அடிகள் இயற்றிய மதங்க சூளாமணியும் தமிழில் புதிய நாடக நூல்களை எழுதப் பெரிதும் துணையாக இருக்கின்றன.

பழைய நாடக இலக்கண நூல்களின் சூத்திரங்கள் சில கிடைத்துள்ளன என்று கூறினோம். அந்தச் சூத்திரங்களின் உதவி கொண்டும் அடியார்க்கு நல்லார் சிலப்பதிகாரத்துக்கு எழுதிய உரை மேற்கோள்களின் உதவிகொண்டும் நாடக நூல்கள் எழுதவேண்டிய முறையைக் கூறுவோம்.

யோனி

முதலில் நாடகத்துக்கு அடிப்படையான கதையை அமைக்க வேண்டும். கதைத் தலைவர் நான்கு வகையினர். 1. உள்ளோன்