பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -13

தலைவனாக உள்ளதோர் பொருள் மேல் கதையை அமைப்பது. அதாவது சரித்திரம் வரலாறுகளைக் கொண்டு கதையை அமைப்பது. 2, இல்லோன் தலைவனாக இல்லதோர் பொருள்மேல் கதை அமைப்பது. அதாவது கற்பனைக் கதை. 3. உள்ளோன் தலைவனாக இல்லதோர் பொருள்மேல் கதையை அமைப்பது. அதாவது உண்மையான கதைத் தலைவனைக் கொண்டு அவனுடைய செயல்களைக் கற்பனையாகப் புனைந்து அமைப்பது. 4. இல்லோன் தலைவனாக உள்ளதோர் பொருள்மேல் கதை அமைப்பது. அதாவது கதைத்தலைவனைக் கற்பனையாக க வைத்து உண்மையாக நிகழ்ந்தவற்றை அவனுடன் பொருத்திக் கூறுவது. இப்படிக் கதைகளைப் பிரித்து அமைப்பதற்கு யோனி என்பது பெயர்.

"உள்ளோர்க் குள்ளதும் இல்லோர்க் குள்ளதும் உள்ளோர்க் கில்லதும் இல்லோர்க் கில்லதும் எள்ளா துரைத்தல் யோனி யாகும்”.

விருத்தி

கதையின் குறிக்கோள் (நோக்கம்) அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கில் ஒன்றைக்கொண்டு இருக்கவேண்டும். இதற்கு விருத்தி என்பது பெயர்.

அறத்தை (ஒழுக்கத்தை அல்லது கடமையை) குறியாகக் கொண்டு தெய்வமானிடரையும், துறந்தாரையும் கதைத் தலைவராக அமைப்பதற்கு சாத்துவதி என்பது பெயர்.

பொருளைக் குறியாகக்கொண்டு அரசர்களையும் வீரர் களையும் கதைத்தலைவராக அமைக்கப்படுவது ஆரபடி என்னும் விருத்தி.

இன்பத்தைப் பொருளாகவைத்துத் தலைவன் தலைவி (காதலன் காதலி)யரை அமைத்துக் கதை இயற்றுவது கைசிகி என்னும் விருத்தி. வீடு (மோட்சம்) என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு கதையமைப்பது பாரதி விருத்தி எனப்படும்.

சந்தி

கதையை நாடகமாக அமைப்பது சந்தி எனப்படும். நாடகத்தை ஐந்து சந்தியாகப் பிரிக்கவேண்டும். நிலத்தைப் பயிரிட்டு நெல்லை