பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை

-

ஓவியம் - அணிகலன்கள் 189

அறுப்பதற்கு ஐந்து கட்டங்கள் இருப்பதுபோல், நாடகத்தின் பயனைப் பெறுவதற்கு அது ஐந்து கட்டங்களாக அமைக்கப்படுகிறது. வயலில் நெல் முளைத்து நாற்றாவது முதல் கட்டம். நாற்று. பயிராக வளர்வது இரண்டாவது கட்டம். விளைந்த பயிர் கருவாகிக் கதிர் கொள்வது மூன்றாவது கட்டம். கதிர் வெளிப்பட்டு முற்றுவது நான்காவது கட்டம். முற்றிய கருவை அறுத்துத் தானியமாகக் கொள்வது ஐந்தாவது கட்டம்.

அதுபோலவே, நாடகத்தை ஐந்து சந்திகளாகப் பிரித்து, முதல் சந்தியை முகம் என்றும், இரண்டாவது சந்தியைப் பிரதிமுகம் என்றும், மூன்றாம் சந்தியைக் கருப்பம் என்றும், நான்காம் சந்தியை விளைவு என்றும், ஐந்தாம் சந்தியைத் துய்த்தல் என்றும் கூறுவர்.

முதற் சந்தி

வயலில் விதைத்த விதை முளைவிட்டுப் பயிராக வளர்வது போல, நாடகப்பாத்திரங்களைக் கொண்டு கதையைத் தொடங்குவது முதற் சந்தியாகிய முகம் ஆகும். இதன் உட்பிரிவுகளுக்குக் காட்சி என்பது பெயர். இதில் நாடகத்தின் முடிவு ஒருவாறு தோன்ற வேண்டும். இரண்டாஞ் சந்தி

முளைத்த பயிர் பெரிதாக வளர்வது போல, நாடகம் கதையைத் தொடர்ந்து செல்வது இரண்டாஞ் சந்தியாகிய பிரதிமுகம் ஆகும். இதற்கும் உட்பிரிவாகிய சில காட்சிகள் உண்டு.

மூன்றாஞ் சந்தி

வளர்ந்த பயிர் கருக்கொண்டு கதிர்விட்டு நிற்பதுபோல, நாடகத்தில் கதையின் விளைவு ஒருவாறு தோன்றுவது மூன்றாஞ் சந்தியாகிய கருப்பம் ஆகும். இதற்குக் காட்சிகள் என்னும் உட்பிரிவுகள் உள்ளன.

நான்காஞ் சந்தி

கதிர்முற்றி மணியாகியதுபோல, நாடகத்தின் விளைவு நன்றாகத் தோன்றுவது நான்காஞ் சந்தியாகிய விளைவு ஆகும். இதற்கும் காட்சி என்னும் உட்பிரிவுகள் உண்டு.

ஐந்தாஞ் சந்தி

முற்றி விளைந்த கதிர்களை அறுத்துக் களத்தில் கொண்டு போய்க் கடாவிட்டுத் தூற்றிக்கொண்டுபோய் உண்பதுபோல, கதையின்