பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-13

முழுப்பயனும் நாடகத்தில் வெளிப்படுவது ஐந்தாஞ் சந்தியாகிய துய்த்தல் ஆகும். இதிலும் காட்சியாகிய உட்பிரிவுகள் உண்டு.

சந்தியை அங்கம் என்றும், காட்சியைக் களம் என்றும் இக்காலத்தில் கூறுவர். சந்தியை வடமொழியில் அங்கம் என்றும் ஆங்கிலத்தில் ஆக்ட் (ACT) என்றும் கூறுவர்.

கதையை ஐந்து சந்தியுள்ள நாடகமாக அமைத்து விட்டால் மட்டும் போதாது. நாடகப்பாத்திரங்களுக்கு ஏற்றபடி சுவைகளை அமைத்து வசனங்களையும் பாட்டுக்களையும் அமைக்கவேண்டும். நாடகத்தில் சுவை (இரசம் அல்லது மெய்ப்பாடு) இன்றியமையாதது. ஆகவே சுவைகளைப் பற்றியும் அறியவேண்டும். சுவை அல்லது மெய்ப்பாடு ஒன்பது வகை என்பர். ஒன்பது மெய்ப்பாடுகளில் நடுவுநிலை (சாந்தம்) என்னும் மெய்பாட்டை நீக்கி, மெய்ப்பாடு எட்டு என்றும் கூறுவர். கூறுவர். தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் எட்டு மெய்ப்பாடுகளைக் கூறுகிறது.

"நகையே யழுகை யிளிவரல் மருட்கை அச்சம் பெருமிதம் வெகுளி யுவகையென் றப்பா லெட்டாம் மெய்ப்பா டென்ப”

எட்டுவகை மெய்ப்பாடு (சுவை)களையும் அவை தோன்றுகிற காரணங்களையும் தொல்காப்பியர் கூறுகிறார்.

66

1. நகை

'எள்ளல் இளமை பேதமை மடனென்

றுள்ளப் பட்ட நகைநான் கென்ப்

2. அழுகை (அவலம்)

"இளிவே இழவே யசைவே வறுமையென

விளிவில் கொள்கை யழுகை நான்கே

"இளிவு என்பது பிறரால் இகழப்பட்டு எளியனாதல். இழவென்பது தந்தையுந் தாயு முதலாகிய சுற்றத்தாரையும், இன்பம் பயக்கும் நுகர்ச்சி முதலியவற்றையும் இழத்தல். அசைவு என்பது பண்டை நிலைமை கெட்டு வேறொருவராகி வருந்துதல். வறுமை என்பது போகம்துய்க்கப் பெறாத பற்றுள்ளம். இவை நான்கும் தன்கண்