பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டை மகளிர் பந்தாட்டம்*

இக் காலத்தில் நமது நாட்டுப் பெண்மகளிர் ஆடும் விளையாட்டு களில் பந்தாட்டமும் ஒன்று. உடல் நலத்துக்காகவும், பொழுதுபோக்குக் காகவும் பெண்மகளிர் பந்து ஆடிவருகிறார்கள். இதுபோன்று, பண்டைக் காலத்துப் பெண்மணிகளும் பந்து விளையாடி மகிழ்ந்தனர். பண்டைக்காலத்துப் பெண்மணிகள் பந்து ஆடிய செய்தியைப் பழந்தமிழ் இலக்கியங்கள் இனிய செய்யுள் களாலே கூறுகின்றன. வசந்தவல்லி என்னும் பெண்மணி பந்து அடித்து விளையாடியதைக் குற்றாலக் குறவஞ்சி என்னும் நூல் கூறுகிறது:

பொங்கு கனங்குழை மண்டிய கெண்டை புரண்டு புரண்டாட-குழல் மங்குலில் வண்டு கலைந்தது கண்டு மதன்சிலை வண்டோட-இனி

இங்கிது கண்டுல கென்படும் என்படும் என்றிடை திண்டாட-மலர்ப்

பங்கய மங்கை வசந்த சௌந்தரி

பந்து பயின்றனளே.

சோதிமாலை என்னும் அரசகுமாரி, தன் தோழியரோடு விளையாடியதைச் சூளாமணி என்னும் காவியம் சீழ்வருமாறு கூறுகிறது:

கந்தாடு மாலியானைக் கார்வண்ணன் பாவை

கருமேகக் குழல்மடவார் கைசோர்ந்து நிற்பக் கொந்தாடும் பூங்குழலும் கோதைகளும் ஆடக்

கொய்பொலந் துகிலசைத்த கொய்சகந் தாழ்ந்தாட வந்தாடும் தேனும்முரல் வரிவண்டும் ஆட

மணிவடமும் பொன்ஞாணும் திருமார்பில் ஆடப்

பந்தாடு மாடேதன் படைநெடுங்கண் ஆடப்

பணைமென் தோள் நின்றாடப் பந்தாடுகின்றார்

  • சமயங்கள் வளர்த்த தமிழ் (1966) நூலில் இடம் பெற்ற கட்டுரை.