பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 13

அரிமலர்க் கோதையொ டணிகலம் சிதறவும்

இருந்தனள் நின்றனள் என்பதை அறியார்

பரந்த பஃறோள் வடிவினள் ஆகித்

திரிந்தனள் அடித்துத் திறத்துளி மறித்தும்

பந்தடித்து இவள் தான் கூறியபடியே மூவாயிரங் கை கணக் கெடுத்தாள். அதன் பிறகு, ஒருவரும் பந்தடிக்க வரவில்லை.

"

மூவாயிரம் கைக்குமேல் யாரும் பந்தடிக்க முடியாது என்று எல்லோரும் வாளாவிருந்தனர். அப்போது, அங்கிருந்த கோசல நாட்டு அரசன் மகள் மானனீகை என்னும் மங்கை எழுந்து பந்துகள் இருந்த இடத்திற்குச் சென்றாள். எல்லோரும் வியப்போடும் 'இவள் என்ன செய்யப்போகிறாள்?' என்று அவளையே பார்த்தார்கள். அவள் பந்துகளைக் கையிலெடுத்தவுடன், அங்கிருந்தவர்கள் எல்லோருக்கும் பெருவியப்பு உண்டாயிற்று. மானனீகை பந்தடிக்கத் தொடங்கினாள். இவள் பந்தாடியதைக் கொங்குவேள் இவ்வாறு விளக்கிக் கூறுகிறார்: “சுழன்றன தாமம் குழன்றது கூந்தல் அழன்றது மேனி அவிழ்ந்தது மேகலை எழுந்தது குறுவியர் இழிந்தது சாந்தம் ஓடின தடங்கண் கூடின புருவம்

அங்கையின் ஏற்றும் புறங்கையின் ஓட்டியும் தங்குற வளைத்துத் தான்புரிந் தடித்தும் இடையிடை யிருகால் தெரிதர மடித்தும்

அரவணி யல்குல் துகில்நெறி திருத்தியும் நித்திலக் குறுவியர் பத்தியில் துடைத்தும்

பற்றிய கந்துகம் சுற்றுமுறை யுரைத்தும் தொடையுங் கண்ணியும் முறைமுறை யியற்றியும் அடிமுதல் முடிவரை யிழைபல திருத்தியும் படிந்தவண் டெழுப்பியும் கிடந்தபந் தெண்ணியும் தேமலர்த் தொடையில் திறத்திறம் பிணைத்தும் பந்துவர நோக்கியும் பாணிவர நொடித்தும் சிம்புளித் தடித்தும் கம்பிதம் பாடியும்

பந்தடித்தாள் என்று அவர் கூறுகிறார்.

وو