பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை ஓவியம்

-

ஓவியம் - அணிகலன்கள்

201

மானனீகை பந்தடித்து, மற்றவளைவிட ஆயிரங்கை அதிக மாகக் கணக்கேற்றினாள். அதாவது, நாலாயிரங்கை கணக்கெடுத்தாள். அப்போது அங்குக் கூடியிருந்த பெண்மணிகள் கைகொட்டி ஆரவாரஞ் செய்து மகிழ்ந்து அவளைக் கொண்டாடினார்கள்.

பெண்மணிகள் விளையாடிய பண்டைக் காலத்துப் பந்தாட்டம் இக்காலத்தில் மறைந்துவிட்டது. இக்காலத்து மகளிர் புது வகையான பந்தாட்டம் ஆடுகிறார்கள். இதுபோன்று பல பழைய விளையாட்டுகள் மறைந்து போய்ப் புது விளையாட்டுகள் தோன்றியுள்ளன. “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே" என்னும் நன்னூல் இலக்கணச் சூத்திரம், இலக்கணத்துக்கு மட்டுமன்று; விளையாட்டுக்கள் முதலிய வற்றுக்கும் பொருந்துவதாகும்.