பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை

-

ஓவியம் - அணிகலன்கள் /203

காவியப் புலவனும் ஓவியக் கலைஞனும்

இயற்கை

சிற்பக் கலைஞனும் ஓவியப் புலவனும், வுருவங்களையும் கற்பனா வுருவங்களையும் தமது சிற்பக் கலையிலும் ஓவியக் கலையிலும் அமைத்துக்காட்ட முடியுமாயினும், இலக்கியக் கலைஞனைப்போல, பல கருத்துக்களை ஒருங்கே யமைத்துக்காட்ட அவர்களால் இயலாது. பல கருத்துக்களை ஒருமிக்க அமைத்துக் கூறும் வல்லமை இலக்கியக் கலைஞனுக்கே யுண்டு. இது இலக்கியக் கலையின் இயல்பு. சொல்லோவியனாகிய இலக்கியக் கலைஞன், சிற்பக் கலையிலும் ஓவியக் கலையிலும் காட்டமுடியாத நுட்பங்களை யெல்லாம் தன்னுடைய சொல்லோவியத்திலே அமைத்துக் காட்டவல்லனாயிருக்கிறான். இலக்கியக் கலைஞன் சொற்களைக் கையாள்வதில் திறமையும் ஆற்றலும் உள்ளவனாய், கற்பனாசக்தியும் உள்ளவனாக இருந்தால், அவன் தனது இலக்கியத்திலே உண்மையையும் அழகையும் இனிமையையும் அமைத்துப் படிப்போர் மனத்தை மகிழச் செய்கிறான். இதனால்தான் இலக்கியக் கலை, அழகுக் கலைகளில் சிறந்த நுண்கலை என்று கூறப்படுகிறது.

கில சான்றுகள் ; சிந்தாமணி

இதனைச் சான்று காட்டி விளக்குவோம். வயலிலே நெற்பயிர் செழிப்பாக வளர்கிறது. வளர்ந்து கருக்கொண்டு விளங்குகிறது. பின்னர், கதிர் வெளிப்பட்டுத் தலை நிமிர்ந்து நிற்கிறது. மணி முற்றிய பிறகு கதிர் சாய்ந்து தலை வணங்கிக் கிடக்கிறது. இந்தக் காட்சியைக் காவியப் புலவரும் இலக்கியக் கலைஞரும் ஆன திருத்தக்க தேவர் காண்கிறார். அக் காட்சியைத் தொடர்ந்து அவர் உள்ளத்திலே சில உண்மைகள் தோன்றுகின்றன. தமக்குத் தோன்றிய அந்த உண்மைகளை யமைத்து நெல்வயலைப் பற்றி ஒரு சொல்லோவியம் தீட்டுகிறார். அச்செய்யுள் இது:

66

'சொல்லருஞ் சூற்பசும் பாம்பின் தோற்றம்போல் மெல்லவே கருவிருந் தீன்று, மேலலார்

செல்வமே போல் தலைநிறுவித், தேர்ந்தநூல்

கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே.

கருக்கொண்ட நெற்பயிர் சூல்கொண்ட பாம்பின் தோற்றம் போலக் காணப்பட்டது. கதிர்கள் வெளிப்பட்டுத் தலை நிமிர்ந்து நிற்பது,