பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 13

இராமாயணம்

கம்பனுடைய செய்யுள் ஒன்றைப் பார்ப்போம். கோதாவிரி ஆற்றை இராமனும், இலக்குமணனும் காண்கிறார்கள். அந்த ஆறு, சிறந்த கவிஞருடைய செய்யுள்போல, அகலமும், ஆழமும், அழகும் தெளிவும், இன்பமும் உள்ளதாகக் காணப்பட்டது என்று கூறுகிறார் கம்பர்.

“புவியினுக் கணியாய் யான்ற

பொருள்தந்து புலத்திற்றாகி

அவியகத் துறைகள் தாங்கி

ஐந்திணை நெறியளாவிச்

சவியுறத் தெளிந்து தண்ணென்

றொழுக்கமும் தழுவிச்சான்றோர்

கவியெனக் கிடந்த கோதா

விரியினை வீரர் கண்டார்.'

ஆற்று நீரையும், கவிஞன் கவியையும் ஒப்பிட்டுச் சொல்லோ வியமாகத் தீட்டிய இக் கம்ப சித்திரத்தை, ஓவியப் புலவரும் சிற்பக் கலைஞரும் எவ்வாறு தமது தமது கலைகளில் காட்ட முடியும்? காட்டமுடியாது. காவியக் கலையை மனத்தில் சிந்தித்து அறிவுக் கண்கொண்டு காண வேண்டி யிருப்பதனாலே, காவியக் கலை அழகுக் கலைகளில் நுட்பமானது என்று கூறப்படுகிறது.

தமிழர் தொன்றுதொட்டு இலக்கியக் கலையை வளர்த்திருக் கிறார்கள். திராவிடக் குழுவினரில் மிகப் பழைய இலக்கியங்களைக் கொண்டிருப்பவர் தமிழரே. தமிழ் இலக்கியங்களை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை: 1, சங்ககால இலக்கியங்கள். 2, இடைக்கால இலக்கியங்கள். 3. பிற்கால இலக்கியங்கள் என்பன.

சங்க கால இலக்கியம்

சங்கால இலக்கியங்கள் கி.பி. 300க்கு முற்பட்ட காலத்திலே இயற்றப்பட்டவை. அவை அகநானூறு, புறநானூறு, நற்றிணை நானூறு, குறுந்தொகை நானூறு, ஐங்குறு நூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பத்துப் பாட்டு முதலியவை. இவை அகப்பொருளாகிய காதலைப் பற்றியும், புறப்பொருளாகிய வீரத்தைப் பற்றியும் பேசுகின்றன, சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் இரண்டு காவியங்களும் சங்ககாலத்திலே