பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை

-

ஓவியம் - அணிகலன்கள் /209

நாடக நூல்கள்

நாடகக் கலை தமிழ்நாட்டிலே மிகப் பழைய காலத்திலிருந்து வளர்க்கப்பட்டது. இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்று கூறப்படும் முத்தமிழில் நாடகத் தமிழும் ஒன்றாகக் கூறப்படுவதனால் இதனை யறியலாம். அப்படியானால் தமிழில் பல நாடக நூல்கள் இருந்திருக்க வேண்டும். இப்போது பழைய நாடக நூல்கள் தமிழில் இல்லை. ஆனால், நாடகத்திற்கு உரிய இலக்கணங்கள், அதாவது நாடகங்கள் எப்படி எப்படி எல்லாம் அமைக்கப்பட வேண்டும் என்பதைப்பற்றிக் கூறும் இலக்கணச் சூத்திரங்கள், தமிழில் உள்ளன.

நாடகம் எழுதுவதற்கும், நாடகம் அமைப்பதற்கும் இலக்கணம் இருக்கும்போது, நாடக இலக்கியமும் இருந்திருக்க வேண்டும் அல்லவா? நாடக இலக்கியங்கள் (நாடகங்கள்) இல்லாமல் நாடக இலக்கணம் உண்டாகாதல்லவா? ஆகவே, நாடக நூல்கள்

இருந்திருக்க வேண்டும்.

நாடக நூல்கள் ஏன் மறைந்தன?

அப்படியானால் அந்த நாடகங்களில் ஒன்றேனும் ஏன் இப்போது இல்லை? என்று கேட்கலாம். நாடகம் நடிப்பதற்கென்று கூத்தர் என்பவர் இருந்தனர். இவர்கள், தாம் நடிக்க எண்ணி நாடகத்தை எழுதிக் கொண்டு நடிப்பர். அவர்கள் கையாண்ட நாடக நூல்கள் அவரிடமே இருந்தன. பொதுமக்கள் படிக்கும்படி நாடக நூல்கள் வெளியிட்டதாகத் தெரியவில்லை. பொது மக்கள் பண்டைக்காலத்தில் நாடகம் கண்டு மகிழ்ந்தார்களே தவிர நாடக நூலைப் படித்து மகிழ்ந்ததாகத் தெரியவில்லை. நாடகம் நடிப்போர் மட்டும் தாங்கள் நடிப்பதற்காக நாடக நூல்களைக் கையாண்டார்கள்.

சேரசோழ பாண்டியர்களும், சிற்றரசர்களும் மறைந்து அரசியல் தலைகீழாக மாறிப்போன பிற்காலத்திலே, கூத்தர்கள் ஆகிய நடிகர்களைப் போற்றுவார் இல்லாமற் போயினர். ஆகவே கூத்தரும் அவர்களிடமிருந்த நாடக நூல்களுடன் மறைந்தனர். இதுவே தமிழில் நாடக நூல்கள் காணப்படாமைக்குக் காரணமாகும்.

நாடக இலக்கணம்

பொது மக்கள் படிப்பதற்கென்று நாடக நூல்கள் பண்டைக் காலத்தில் இருந்திருந்தால், அவற்றின் பெயர்களையும் அந்நூல்களின் சில பகுதிகளையும் உரையாசிரியர்கள் தமது

உரைகளில்