பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 13

1. முகம். 2. பயிர் முகம். 3. கருப்பம். 4 விளைவு. 5. துய்த்தல் என்பன. இவற்றை விளக்குவோம்.

1. முகம் என்பது, உழுது எருவிட்டு அமைத்த நிலத்தில் விதைக்கப்பட்ட விதை முளையாகத் தோன்றுவது போல, நாடகக் கதையின் போக்கு தோன்ற அமைப்பது. இது முகம் என்னும் முதல் சந்தியாகும்.

2. பயிர் முகம் என்பது, முளைத்த நாற்றானது இலைவிட்டு வளர்வது போன்று நாடகக் கதை வளர்வது. இது பிரதிமுகம் என்னும் இரண்டாவது சந்தி, பிரதிமுகம் என்று அடியார்க்கு நல்லார் கூறுவதை பயிர் முகம் என்று வீரசோழிய உரையாசிரியர் பெருந்தேவனார் கூறுகிறார்.4

3. கருப்பம் என்பது, வளர்ந்த பயிர் கருக்கொண்டு கதிர் விடுவதுபோல, நாடகக் கதையின் கருத்துத் தோன்றும்படி அமைப்பது இது கருப்பம் என்னும் மூன்றாம் சந்தி.

4. விளைவு என்பது, கதிர் திரண்டு முற்றி மணியாகி அறுவடைக்கு ஆயத்தமாக இருப்பதுபோல, நாடகப் பொருள் நன்கு விளங்க அமைப்பது. இது விளைவு என்னும் நான்காம் சந்தி. விளைவு என்று அடியார்க்கு நல்லார் கூறுவதை விமரிசனம் அல்லது வைரிமுகம் என்று பெருந்தேவனார் கூறுகிறார்.5

5. துய்த்தல் என்பது, முற்றிவிளைத்த கதிர்களை அறுத்துப் போர் அடித்து மணியாகப் பிரித்துக் கொண்டு போய் உண்டு மகிழ்வதுபோல, நாடகக் கதையின் முழுக்கருத்தும் தோன்ற அமைப்பது. இது துய்த்தல் என்னும் ஐந்தாம் சந்தி. துய்த்தல் என்று அடியார்க்கு நல்லார் கூறுகிற இச் சந்தியைப் பெருந்தேவனார் நிருவாணம் என்று கூறுகிறார்.6

இவ்வாறு ஐந்து சந்திகளாக நாடகக் கதை அமையவேண்டும் என்று நாடகத் தமிழ் இலக்கண நூல்கள் கூறுகின்றன. பல நாடக நூல்களை எழுதி உலகப் புகழ் பெற்றவர் ஷேக்ஸ்பியர் என்னும் ஆங்கிலப் நாடகப் பேராசிரியர். இவர் எழுதிய அழியாப் புகழ்பெற்ற நாடக நூல்கள், உலகமெங்கும் போற்றிப் புகழப்படுகின்றன. அவர் எழுதிய நாடக நூல்களில் பெரும்பாலன ஐந்து சந்திகளை (ஐந்து ஆக்டுகளை)க் கொண்டதாக இருக்கின்றன. (வெகு சில நாடகங்கள் மட்டும் ஏழு ஆக்டுகளைக் கொண்டிருக்கின்றன.) எனவே, தமிழ்