பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை

நாடக

-

ஓவியம் - அணிகலன்கள் /213

ஷேக்ஸ்பியர்

இலக்கண அமைதிக்கு ஒத்ததாகவே

நாடகங்களில் பெரும்பான்மையும் அமைந்திருக்கின்றன.

ஒன்பது வகைச் சுவை

"

சுவைகள் நாடகத்திற்கு இன்றியமையாதவை. ஆகவே சுவையைப்பற்றிக் கூறவேண்டும். தமிழ் நாடக இலக்கண நூல்களிலே சுவைகளைப் பற்றியும் கூறப்பட்டுள்ளன. வீரம், அச்சம், இழிப்பு, வியப்பு, காமம், அவலம், உருத்திரம், நகை, நடுவுநிலமை எனச் சுவைகள் ஒன்பது வகைப்படும். இந்த ஒன்பது சுவைகளையும் அந்தந்தப் பாத்திரங்களில் அமைத்து நாடக நூலாசிரியன். (ஏன்? காவியப் புலவனுங்கூட) எழுதவேண்டும். நாடகம் நடிப்போரும் அந்தந்த நடிப்புக்கேற்றவாறு அந்தந்தச் சுவைகள் தோன்றும்படி நடிக்கவேண்டும்.

சுவை

66

என்றால் என்ன? சுவை என்பது காணப்படும் பொருளால் காண்போர் அகத்தில் (மனத்தில்) உண்டாகும் விகாரம்.” என்று விளக்குகிறார் உரையாசிரியராகிய இளம் பூரணர்.

இனி, இந்த ஒன்பது சுவைகளையும் விளக்குவோம்.

“1. வீரம் என்பது, மாற்றாரை (பகைவரைக்) குறித்து நிகழ்வது. 2. அச்சம் என்பது, அஞ்சத்தகுவ கண்டவழி நிகழ்வது.

3. இழிப்பு என்பது, இழிக்கத்தக்கன கண்வழி நிகழ்வது.

4. வியப்பு என்பது, வியக்கத்தக்கன கண்டுழி நிகழ்வது. வியப்பு எனினும் அற்புதம் எனினும் ஒக்கும்:

6

5. காமம் என்பது, இன்ப நிகழ்ச்சியான் நிகழ்வது காமம் எனினும் சிங்காரம் எனினும் ஒக்கும்.

6. அவலம் என்பது, இழிவுபற்றிப் பிறப்பது, அவலம் எனினும் கருணை எனினும் ஒக்கும்.

7. உருத்திரம் என்பது, அவமதிப்பாற் பிறப்பது உருத்திரம் எனினும், வெகுளி எனினும் ஒக்கும்.

8. நகை என்பது, இகழ்ச்சி முதலாயினவற்றாற் பிறப்பது.