பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216

1. வீரச்சுவை

66

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 13

‘வீரச்சுவை யவிநயம் விளம்புங் காலை

முரிந்த புருவமும் சிவந்த கண்ணும்

பிடித்த வாளும் கடித்த வெயிறும் மடித்த வுதடுஞ் சுருட்டிய நுதலும் திண்ணென வுற்ற சொல்லும் பகைவரை யெண்ணல் செல்லா விகழ்ச்சியும் பிறவும் நண்ணும் என்ப நன்குணர்ந் தோரே.

2. அச்சச் சுவை

“அச்ச வவிநயம் ஆயுங் காலை

ஒடுங்கிய வுடம்பும் நடுங்கிய நிலையும் அலங்கிய கண்ணுங் கலங்கிய வுளனுங் கரந்துவர லுடைமையுங் கையெதிர் மறுத்தலும் பரந்த நோக்கமும் இசைபண் பினவே.

3. இழிப்புச் சுவை

99

“இழிப்பின் அவிநயம் இயம்புங் காலை இடுங்கிய கண்ணும் எயிறுபுறம் போதலும் ஒடுங்கிய முகமும் உஞற்றாக் காலும் சோர்ந்த யாக்கையும் சொல்நிரம் பாமையும் நேர்ந்தன வென்ப நெறியறிந் தோரே.

4. அற்புதச் சுவை

66

'அற்புத வவிநயம் அறிவரக் கிளப்பில்

சொற்சோர் வுடையது சோந்த கையது மெய்ம்மயிர் குளிர்ப்பது வியத்தக வுடையது எய்திய திமைத்தலும் விழித்தலும் இகவாதென் றையமில் புலவர் அறைந்தனர் என்ப.

5. காமச் சுவை

66

'காம வவிநயங் கருதுங் காலைத்

தூவுள் ளுறுத்த வடிவுந் தொழிலும்

காரிகை கலந்த கடைக்கணும் கவின்பெறு

மூரன் முறுவல் சிறுநிலா வரும்பலும்