பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை -ஓவியம் - அணிகலன்கள் ஓவியம் - அணிகலன்கள் /217

மலர்ந்த முகனும் இரந்தமென் கிளவியும் கலந்தன பிறவும் கடைப்பிடித் தனரே.

6. அவலச் சுவை

66

'அவலத் தவிநயம் அறிவரக் கிளப்பில் கவலையொடு புணர்ந்த கண்ணீர் மாரியும் வாடிய நீர்மையும் வருந்திய செலவும் பீடழி இடும்பையும் பிதற்றிய சொல்லும் நிறைகை யழிதலும் நீர்மையில் கிளவியும் பொறையின் றாகலும் புணர்த்தினர் புலவர்.

7. நகைச் சுவை

66

'நகையின் அவிநயம் நாட்டுங் காலை மிகைபடு நகையது பிறர்நகை யுடையது கோட்டிய முகத்தது....

விட்டுமுரி புருவமொடு விலாவுறுப் புடையது செய்வது பிறிதாய் வேறுசே திப்பதென்று ஐயமில் புலவர் ஆய்ந்தனர் என்ப.

8. நடுநிலைச் சுவை

66

"நாட்டுங் காலை நடுநிலை யவிநயம்

கோட்பா டறியாக் கொள்கையும் மாட்சியும்

அறந்தரு நெஞ்சமும் ஆறிய விழியும்

பிறழ்ந்த காட்சி நீங்கிய நிலையும்

குறிப்பின் றாகலும் துணுக்க மில்லாத்

99

தகைமிக வுடைமையும் தண்ணென வுடைமையும்

அளத்தற் கருமையும் அன்பொடு புணர்தலும்

கலக்கமொடு புணர்ந்த நோக்குங் கதிர்ப்பும் விலங்கா ரென்ப வேண்டுமொழிப் புலவர்."

9. உருத்திரச் சுவை

66

'உருத்திரச்சுவை யவிநயம்..

9910

செயிற்றியம் என்னும் நாடகத்தமிழ் நூலிலிருந்து சுவையைப் பற்றிய மூன்று சூத்திரங்களை இளம்பூரணர் என்றும் உரையாசிரியர் தமது உரையிலே மேற்கோள் காட்டுகிறார்.11 அச்சூத்திரங்கள் இவை: