பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 13

நகைச்சுவையும் நகைப்பொருளும்

“உடனிவை தோன்றும் இடமியா தெனினே

முடவர் செல்லுஞ் செலவின் கண்ணும் மடவோர் சொல்லுஞ் சொல்லின் கண்ணும் கவற்சி பெரிதுற் றுரைப்போர்க்கண்ணும் பிதற்றிக் கூறும் பித்தர் கண்ணும் சுற்றத் தோரை யிகழ்ச்சிக் கண்ணும் மற்று மொருவர்கட் பட்டோர்க் கண்ணும் குழவி கூறும் மழலைக் கண்ணும் மெலியோன் கூறும் வலியின் கண்ணும் வலியோன் கூறும் மெலிவின் கண்ணும் ஒல்லார் மதிக்கும் வனப்பின் கண்ணும் கல்லார் கூறுங் கல்விக் கண்ணும் பெண்பிரி தன்மை யலியின் கண்ணும் ஆண்பிரி பெண்மைப் பேடிக் கண்ணும் களியின் கண்ணுங் காவாலி கண்ணும் தெளிவிலார் ஒழுகுங் கடவுளார் கண்ணும் ஆரியர் கூறுந் தமிழின் கண்ணும் காரிகை யறியாக் காமுகர் கண்ணும் கூனர் கண்ணுங் குறளர் கண்ணும் ஊமர் கண்ணுஞ் செவிடர் கண்ணும் ஆன்ற மரபின் இன்னுழி யெல்லாந் தோன்று மென்ப துணிந்திசி னோரே.'

அழுகைச் சுவையும் அழுகைப் பொருளும்

“கவலை கூர்ந்த கருணையது பெயரே யவல மென்ப வறிந்தோர் அதுதான் நிலைமை யிழந்து நீங்குதுணை யுடைமை தலைமை சான்ற தன்னிலை யழிதல் சிறையணி துயரமொடு செய்கையற் றிருத்தல் குறைபடு பொருளொடு குறைபா டெய்தல் சாபம் எய்தல் சார்பிழைத்துக் கலங்கல் காவ லின்றிக் கலக்கமொடு திரிதல் கடகந் தொட்டகை கயிற்றொடு கோடல்