பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை -ஓவியம் ஓவியம் - அணிகலன்கள் /219

முடியுடைச் சென்னிபிற ரடியுறப் பணிதல் உளைப்பரி பெருங்களி றூர்ந்த சேவடி தளைத்திளைத் தொலிப்பத் தளர்ந்தவை நிறங்கிள ரகலம் நீறொடு சேர்த்தல்

மறங்கிளர் கயவர் மனந்தவப் புடைத்தல் கொலைக்களங் கோட்டங்கோன்முனைக் கவற்சி

யலைக்கண் மாறா வழுகுரல் அரவம்

இன்னோ ரன்னவை யியற்பட நாடித்

துன்னினர் உணர்க துணிவறிந் தோரோ.

"இதன்பய மிவ்வழி நோக்கி

யசைந்தன ராகி யழுதல் என்ப.

உவகைச் சுவையும் உவகைப் பொருளும்

66

'ஒத்த காமத் தொருவனு மொருத்தியும்

ஒத்த காமத் தொருவனொடு பலரும் ஆடலும் பாடலும் கள்ளுங் களியும் ஊடலும் உணர்தலும் கூடலு மிடைந்து புதுப்புனல் பொய்கை பூம்புனல் என்றிவை விருப்புறு மனத்தொடு விழைந்து நுகர்தலும் பயமலை மகிழ்தலும் பனிக்கடல் ஆடலும் நயனுடை மரபின் நன்னகர்ப் பொலிதலும் குளம்பரிந் தாடலுங் கோலஞ் செய்தலும் கொடிநகர் புகுதலுங் கடிமனை விரும்பலும் துயிற்க ணின்றி யின்பந் துய்த்தலும்

அயிற்கண் மடவார் ஆடலுள் மகிழ்தலும்

நிலாப்பயன் கோடலும் நிலம்பெயர்ந் துறைதலும்

கலம்பயில் சாந்தொடு கடிமலர் அணிதலும்

ஒருங்கா ராய்ந்த வின்னவை பிறவுஞ்

சிருங்கா ரம்மென வேண்டுப விதன்பயன்

துன்ப நீங்கத் துகளறக் கிடந்த

இன்பமொடு புணர்ந்த வேக்கழுத் தம்மே.'

சுவையை நான்கு பிரிவாகப் பிரித்துக் கூறுவர் சுவைப் பொருள், சுவையுணர்வு, குறிப்பு, விரல் என்பன அப்பிரிவுகள்