பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 13

காரணமின்றி மெலிந்த முக முடைமையும் மெலிவொடு புணர்ந்த விடும்பையு மேவரப் பொலியுமென்ப பொருந்து மொழிப் புலவர்.

7. இன்புற்றோன் அவிநயம்

99

"இன்பமொடு புணர்ந்தோன் அவிநயம் இயம்பில் துன்பம் நீங்கித் துவர்த்த யாக்கையும்

தயங்கித் தாழ்ந்த பெருமகிழ் வுடைமையும் மயங்கி வந்த செலவுநனி யுடைமையும் அழகுள் ளுறுத்த சொற்பொலி வுடைமையும் எழிலொடு புணர்ந்த நறுமல ருடைமையும் கலங்கள்சேர்ந் தகன்ற தோண்மார் புடைமையும் நலக்கெழு புலவர் நாடினர் என்ப.

8. தெய்வமுற்றோன் அவிநயம்

'தெய்வ முற்றோன் அவிநயஞ் செப்பில் கைவிட்டெரிந்த கலக்க முடைமையும்

மடித்தெயிறு கௌவிய வாய்த்தொழி லுடைமையும் துடித்த புருவமும் துளங்கிய நிலையும் செய்ய முகமுஞ் சேர்ந்த செருக்கும் எய்தும் என்ப இயல்புணர்ந் தோரே.

9. ஞஞ்ஞையுற்றோன் அவிநயம்

66

ஞஞ்ஞை யுற்றோன் அவிநயம் நாடில் பன்மென் றிறுகிய நாவழி யுடைமையும் நுரைசேர்ந்து கூம்பும் வாயும் நோக்கினர்க் குரைப்போன் போல வுணர்வி லாமையும் விழிப்போன் போல விழியா திருத்தலும் விழுத்தக வுடைமையும் ஒழுக்கி லாமையும் வயங்கிய திருமுக மழுங்கலும் பிறவும்

மேலிய தென்ப விளங்குமொழிப் புலவர்.

இஃது ஏமுறு மாக்க ளவிநயம்

99