பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 13

விளியினுந் துளியினு மடிந்தசெவி யுடைமையும் கொடுகி விட்டெறிந்த குளிர்மிக வுடைமையும் நடுங்கு பல்லொலி யுடைமையு முடியக் கனவுகண் டாற்றா னெழுதலு முண்டே.

15. பனித் தலைப்பட்டோன் அவிநயம்

“பனித்தலைப் பட்டோன் அவிநயம் பகரின் நடுக்க முடைமையும் நகைபடு நிலைமையும் சொற்றளர்ந் திசைத்தலும் அற்றமி லவதியும் போர்வை விழைதலும் புந்திநோ வுடைமையும் நீறாம் விழியும் சேறு முனிதலும்

இன்னவை பிறவும் இசைந்தனர் கொளலே.

16. வெயில் தலைப்பட்டோன் அவிநயம்

“உச்சிப் பொழுதின் வந்தோன் அவிநயம் எச்ச மின்றி இயம்புங் காலைச் சொரியா நின்ற பெருந்துயர் உழந்து எரியா நின்ற வுடம்பெரி யென்னச் சிவந்த கண்ணும் அயர்ந்த நோக்கமும் பயந்த தென்ப பண்புணர்ந் தோரே.

17. நாணமுற்றோன் அவிநயம்

66

“நாண முற்றோன் அவிநயம் நாடின்

இறைஞ்சிய தலையு மறைந்த செய்கையும் வாடிய முகமும் கோடிய உடம்பும்

கெட்ட வொளியும் கீழ்க்கண் ணோக்கமும் ஒட்டினர் என்ப உணர்ந்திசி னோரே.

18. வருத்தமுற்றோன் அவிநயம்

வருத்த முன்றோன் அவிநயம் வகுப்பில் பொருத்த மில்லாப் புன்கண் உடைமையும் சோர்ந்த யாக்கையும் சோர்ந்த முடியும் கூர்ந்த வியர்வும் குறும்பல் லுயாவும் வற்றிய வாயும் வணங்கிய வுறுப்பும் உற்ற தென்ப உணர்ந்திசி னோரே.