பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 13

“கிளர்வரி என்பது கிளங்குங் காலை

யொருவ ருய்ப்பத்தோன்றி யவர்வா

யிருபுற மொழிப்பொருள் கேட்டுநிற் பதுவே'

என்பது சூத்திரம்.

6. தேர்ச்சிவரி. தன்னுடைய மனக்கவலையைச் சுற்றத் தாருக்குக் கூறுவது

"தேர்ச்சி யென்பது தெரியுங்காலைக் கெட்ட மாக்கள் கிளைகண் டவர்முன்

பட்டதும் உற்றதும் நினைஇ இருந்து

தேர்ச்சியா டுரைப்பது தேர்ச்சிவரி யாகும்

என்பது சூத்திரம்.

7. காட்சிவரி. தன் வருத்தத்தைப் பலருங் காணும் படி நடித்தல்.

66

'காட்சிவரி என்பது கருதுங் காலைக்

கெட்ட மாக்கள் கிளைகண்டவர் முனர்ப்

பட்டது கூறிப் பரிந்து நிற்பதுவே'

என்பது சூத்திரம்.

8. எடுத்துக்கோள்வரி. மிக்க துன்பம் அடைந்தவளாக வீழ்ந்து பிறர் எடுத்துக்கொள்ளும்படி நடித்தல்.

“எடுத்துக் கோளை இசைக்குங் காலை அடுத்தடுத் தழிந்து மாழ்கி யயலவர் எடுத்துக்கோள் புரிந்த தெடுத்துக் கோளே.'

என்பது சூத்திரம்.

சொல்

99

சொல் என்பது நாடக பாத்திரங்கள் நாடகத்தில் நடிக்கும் போது பேசும் பேச்சு. அது மூன்று வகைப்படும் உட்சொல், புறச் சொல், ஆகாயச் சொல் என்று.

உட்சொல் என்பது நடிகன் தானே நெஞ்சோடு கூறல். புறச் சொல் என்பது கேட்போர்க்கு உரைத்தல், ஆகாயச் சொல் என்பது தானே கூறல்.