பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை ஓவியம்

-

ஓவியம் - அணிகலன்கள் /229

“நெஞ்சொடு கூறல் கேட்போர்க் குரைத்தல் தஞ்சம் வரவறிவு தானே கூறலென் றம்மூன் றென்ப செம்மைச் சொல்லே.14

இதுகாறும் எடுத்துக் கூறியவற்றால், பண்டைக்காலத்திலே நமது முன்னோர் நாடகக் கலையை நன்கு வளர்த்திருந்தனர் என்பது அறியப்படும். ஆனால், பிற்காலத்திலே கி.பி. 17 ஆம் நூற்றாண் டிற்குப் பிறகு, தமிழ்நாட்டில் நாடகக் கலை அழிந்துவிட்டதென்றே கூற வேண்டும். தக்க நாடகம் கலைஞரைப் போற்றாதார் இல்லாத படியினால் நாடகக் கலைஞரும் - நாடக நூல்களும் மறைந்து விட்டன. பிறகு. நாடகக் கலையுணராத தெருக் கூத்தாடுவோர் தோன்றி அக்கலைக்கு இழுக்கையும் அவமதிப்பையும் உண்டாக்கி விட்டனர்.

ஆனால், இப்பொழுது நாடகக்கலை பெருமையும் சிறப்பும் அடைந்து வருகிறது. தெருக்கூத்தாடிகள் மறைந்து வருகின்றனர். மேல்நாட்டு நாடக முறைத் தொடர்புடனும் நவீன வளர்ச்சியுடனும் நாடகக்கலை, தக்க கலைஞர்களால் வளர்க்கப்பட்டு வருகிறது. இதற்குப் பொது மக்கள் ஆதரவும் இருக்கிறது.

எனினும் நாடக நூல்கள் தமிழில் போதிய அளவு இன்னும் ஏற்படவில்லை. நாடக நூல்கள் இயற்றுவதற்கு மேலே காட்டிய பழந்தமிழ் நாடகக் குறிப்புகள் பெரிதும் துணைபுரியும் என நம்புகிறோம்.

கோயிலில் நாடகம்

பண்டைக்காலத்தில், அரண்மனைகளிலும் சிற்றரசர் குறுநில மன்னர் முதலியவர்களின் மாளிகைகளிலும் நாடகங்கள் நடை பெற்றன. சோழ அரசர் காலத்தில் கி.பி. 10-ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு, கோயில்களில் நாடகங்கள் நடைபெற்றன.

முதலாம் இராஜராஜன், தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் இராஜராஜேசுவர நாடகத்தை ஆட ஏற்பாடு செய்தான் என்று ஒரு சாசனம் கூறுகிறது5 அந்தச் சாசனத்தின் வாசகம் இது:-

66

உடையார் ஸ்ரீ ராஜ ராஜேசுவரமுடையார் கோயிலிலே ராஜராஜேசுவர நாடகமாட நித்தம் நெல்லுத் தூணியாக நிவந்தஞ் செய்த நம்வாய்க் கேழ்விப்படி சாந்திக் கூத்தன் திருவாலன் திருமுது குன்றனான விஜயராஜேந்திர ஆசார்யனுக்கும் இவன் வம்சத்