பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை

-

ஓவியம் – அணிகலன்கள்

231

நூல்களும் மறைந்தன. அக்காலத்தில் ஓலைச் சுவடிகளாக இருந்த படியாலும் நடிகைரத் தவிர மற்றவர் நாடக நூல்களை வைத்திருப்பது அக்காலத்து வழக்கமில்லாதபடியினாலும், அந்நாடக நூல்கள் மறைந்தன.

அதனால், நாடகக்கலை யறியாத மூன்றாந்தர, நான்காந்தர ஆட்கள் நாடகம் நடிக்க முன்வந்து நாடகம் ஆடி நாடகக்கலையின் பெருமையை யழித்துவிட்டார்கள். “கூத்தாடிகள்" என்றவசைச் சொல்லையும் பெற்றார்கள்.

நாடகக் கலையின் மறுமலர்ச்சி

ஆனால், பழைய குழப்பமும், கலகமும் இருந்த காலம் போய், நாடு ஆங்கிலேயர் ஆட்சியில் வந்த பிறகு, நாட்டில் அமைதியும் பாதுகாப்பும் ஏற்பட்டு, மக்கள் கலையில் மனஞ்செலுத்திய சென்ற நூற்றாண்டு முதல், நாடகக்கலைக்கு நன்மதிப்பு ஏற்பட்டது.

மேல்நாட்டு நாடகங்களின் முறையும் நமது நாட்டுப் பழைய நாடக முறையும் சேர்ந்த உயர்தரமான நாடகங்கள் இப்போது நடத்தப்படுகின்றன. உயர்தர நடிகர்களும் தோன்றி பேரும் புகழும் பெற்றிருக்கிறார்கள். புதிய நாடக நூல்களும் தோன்றி வருகின்றன.

அடிக்குறிப்புகள்

1. சிந்தாமணி, நாமகள் 24. 2. சூளாமணி, கலியாணச் சருக்கம் 205.

3. சிலம்பு: 3: 12-ஆம் அடி. அடியார்க்கு நல்லார் உரை மேற்கோள்.

4. பொருளதிகாரம் 21-ஆம் கலித்துறை உரை.

5. வீரசோழியம் பொருளதிகாரம் 31-ஆம் கலித்துறை உரை.

6. வீரசோ. பொருள். 21-ஆம் கலித்துறை உரை.

7. தொல்: பொருள்; மெய்ப்பாடு, 1-ஆம் சூத்திரம் இளம்பூரணர் உரை.

8. தொல்: பொருள்: மெய்ப்பாடு: 3-ஆம் சூத்திரம்

9. சிலம்பு: அரங்கேற்றுகாதை 12-ஆம் அடி உரை.

10. இதற்குச் சூத்திரம் காணப்படவில்லை.

11. தொல். பொருள். மெய்ப்பாட்டியல். இளம்பூரணர் உரை.

12. சிலம்பு; அரங்கு. 12-ஆம் அடி உரை.

13. சிலம்பு: வேனிற்காதை. 77ஆம் வரி உரை.

14. அடியார்க்கு நல்லார் உரைமேற்கொள். சிலம்பு. அரங்கேற்று காதை. 12-ஆம் வரி உரை.

15. S.I.I. Vol. II. P. 306.

16. 444 of 1929-30.