பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை

66

-

ஓவியம் - அணிகலன்கள் /233

“காதலர் அகன்ற போழ்தில் கற்புடை மகளிர் போலப் போதெலாங் குவிந்த பொய்கைத் தாமரை பொலிவு நீங்க மீதுலாந் திகிரி வெய்யோன் மறைதலும் சிறுவெள்ளாம்பல் தாதெலாம் மலர நக்குத் தம்மையே மிகுத்த வன்றே.

யார்க்கும் இனியவர் யாவர்?

99

தோலாமொழித் தேவரே அந்தத் தாமரைக் குளத்தை இன்னொரு விதமாகக் காட்டுகிறார். மாலை நேரத்தில் சூரியன் மறைந்துவிட்டது. மறைந்தவுடனே குளத்தில் மலர்ந்திருந்த தாமரைப் பூக்கள் மெல்ல இதழ்களை மூடிக் குவிந்துவிட்டன; வானத்திலே வெண்ணிலா காணப்படுகிறது. ஆம்பல் மொட்டுகள் மெல்ல இதழ்விரித்து மலர்கின்றன. இந்த இயற்கைக் காட்சியைக் கண்ட தோலாமொழித் தேவர் இதனுடன் உலகியல் உண்மை யொன்றைப் பொருத்திக் கூறுகிறார். அவர் தீட்டிய அழகான சொல்லோவியம் இது.

66

“அங் கொளி விசும்பில் தோன்றும்

அந்திவான் அகட்டுக் கொண்ட

திங்களங் குழவிப் பால்வாய்த்

தீங்கதிர் அமுதம் மாந்தித்

தங்கொளி விரித்த ஆம்பல்,

தாமரை குவிந்த ஆங்கே

எங்குளார் உலகில் யார்க்கும்

ஒருவராய் இனிய நீரார்”

இந்தச் செய்யுளின் அழகுக்குமேலும் அழகு செய்வதாக எங்குளார் உலகில் யார்க்கும் ஒருவராய் இனிய நீரார்' என்பது அமைந்திருக்கிறது.

அந்திப் பெண்

பொழுது சாய்கிறது; சூரியன் மேற்கே சென்று மறைந்து கொண்டிருக்கிறான். செவ்வானம் பரந்து காணப்படுகிறது. மேற்கு வானத்தில் தோன்றுகிற செவ்வானம், போர்க்களத்தில் செவ்விரத்தம் படிந்து காணப்படுவதுபோலத் தோன்றுகிறது. பையப்பையச் சூரியன் மறைந்துவிட்டான். மெல்ல மெல்ல இரவு கருநிறமாக ஊருக்குள் புகுகிறது. போர்க்களம் போல் காட்சியளித்த செவ்வானம் மறைந்து இருள் என்னும் கருநிறப் போர்வை போர்த்ததுபோலக் காணப்படுவது,