பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 13

வேர்முதல் நுனிவரையில் உலர்ந்துபோன அந்த மரத்தில் இலை இல்லை. ஆகவே அதன்கீழே தங்குவதற்கு நிழல் இல்லை. வேர் மரம் கிளைகள் எல்லாம் வற்றி வரண்டு உலர்ந்து காய்ந்துள்ளன. பட்டுப்போன மரத்தின் காட்சியைக்கண்ட பாலை பாடிய பெருங் கடுங்கோவின் என்னென்னவோ எண்ணங்கள் தோன்றுகின்றன. அந்த எண்ணங்கள் அழகான செய்யுளாக வெளிப்படுகின்றன.

66

மனத்தில் ப

'வறியவன் இளமைபோல் வாடிய சினையவாய்ச்

சிறியவன் செல்வம்போல் சேர்ந்தார்க்கு நிழலின்றி

யார் கண்ணும் இகந்துசெய்து இசைகெட்டான் இறுதிபோல் வேரோடு மரம்வெம்ப விரிகதிர் தெறுதலின் அலவுற்றுக் குடிகூவ ஆறின்றிப் பொருள்வெஃகிக் கொலையஞ்சா வினைவரால் கோல்கோடி அவன்நிழல் உலகுபோல் உலறிய உயர்மர வெஞ்சுரம்”.

(சினைய - கிளைகளையுடைய, இகந்துசெய்து செய்யத் தகாத வற்றைச் செய்து, இசை - புகழ், ஆறின்று - முறையல்லாமல், வெஃகி - விரும்பி, வினைவர் - அரச ஊழியர், உலகுபோல்-குடிமக்கள் போல.) வறுமையுள்ள இளையவன் பொருளில்லாமையால் இன்பம் நுகரமுடியாமல் வருந்துவதுபோல, மரத்தின் கிளைகள் வாடிக் கிடக்கின்றன. வறிய மனமுள்ளவன், தன் செல்வத்தை தன்னைச் சார்ந்தவருக்குக் கொடுத்து அவர் துன்பத்தை நீக்காமலிருப்பது போல, வற்றல் மரம் தன்னையடைந்தவருக்கு நிழல் தராமல் இருக்கிறது. நல்லது செய்து புகழ்பெறாமல் எல்லோருக்கும் தீமை செய்து ‘பாவி’ என்று பெயர் படைத்தவனைப்போல, அந்த மரம் வேரோடு காய்ந்துகிடக்கிறது. இது மட்டுமா? அரச ஊழியர் பொருளாசையினால் குடிமக்களை வருத்த, அதனால் உண்டான கொடுங்கோல் ஆட்சியின் கீழுள்ள குடிமக்கள் வாழவழியில்லாமல் வாடி நிற்பது போல, இந்தப் பட்டுப்போன மரம் நிற்கிறது. இவ்வாறு பாலைவனத்துப் பட்டுப்போன மரம் புலவருக்குக் காட்சியளிக்கிறது.

மணமில்லாக் கோங்கும், குணமில்லாச் செல்வரும்

தோலா மொழித்தேவர் தம்முடைய சூளாமணிக் காவியத்திலே, பூஞ்சோலையில் பூத்த கோங்கிலவ மலர்களை அறிமுகப்படுத்துகிறார். அதிலும் ஒரு சிறந்த உண்மையைக் கூறுகிறார்.