பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 13

கவியெனக் கிடந்த கோதா

வரியினை வீரர் கண்டார்”.

கோதாவரி ஆறு, கம்பன் கவியைப்போலப் பாய்ந்தோடு கிறது என்று நாம் கூறலாமல்லவா?

எல்லாரும் அழுதனர்

கம்பன்காட்டும் அவலச் சுவையொன்றைப் பார்ப்போம். இந்திரசித்துடன் இராமன் போர் செய்தான். இந்திரசித்தின் போருக்கு ஆற்றாமல் இராமனுடைய சேனை முழுவதும் இறந்துவிட்டன. தனித்துநின்ற இராமன் தன்னுடைய சேனை

முழுவதும்

மாண்டுபோனதைக் கண்டு மூர்ச்சையடைகிறான். அப்போது போர்க்களத்தைக் கண்ட சீதை, எல்லோரும் விழுந்துகிடப்பதைக் கண்டு இராமனும் இறந்துபோனான் என்று எண்ணி ஏங்கி ஏங்கி அழுதாள். அவளுடைய அழுகை எல்லோர் மனத்தையும் உருக்கிவிட்டது. அவர்கள் எல்லோரும் அவளோடு சேர்ந்து அழுதார்கள் என்று கம்பர் கவி பாடுகிறார்.

“மங்கை அழலும், வானாட்டு

மயில்கள் அழுதார், மழவிடையான்

பங்கில் உறையும் குயில் அழுதாள்; பதும மலர்மேல் மாதழுதாள்;

கங்கை யழுதாள் நாமடந்தை

அழுதாள்; கமலத் தடங்கண்ணன்

தங்கையழுதாள்;இரங்காத

அரக்கி மாருந் தளர்ந்தழுதார்".

என்று கவிபாடிய கம்பர், இக்கவிதையைப் படிப்பவரின் மனத்தில் அவலச் சுவையை யுண்டாக்கி இரங்கச் செய்கிறார்.

புல்லர்க்குச் சொன்ன பொருள்

கம்பரின் இன்னொரு சொல்லோவியத்தைப் பார்ப்போம். தாடகையை இராமன் அம்பு எய்து கொன்றான். இராமன் எய்த அம்பு தாடகையின் நெஞ்சில் பாய்ந்து ஊடுருவி அப்பால் சென்றது. ஊடுருவிச் சென்ற அம்பிலே கம்பர் அரியதோர் கருத்தை அமைத்து அதற்கோர் தனிச் சிறப்பைக் கொடுத்திருக்கிறார். அறிவுடையோர் சொல்லும் நன்மொழி, அறிவில்லாதவர் மனத்தில் தங்காமல் போய்விடுவதுபோல அம்பு ஊடுருவிப் போயிற்று என்று கூறுகிறார்.