பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 13

காட்சி, தாமரைப் பூ. வல்லிக்கொடிகள் முதலான வண்ண ஓவியங்கள் நிறங்கள் மழுங்கிப்போய் மறைந்துபோகும் நிலையில் குற்றுயிராகக் கிடந்தன. சில ஆண்டுகள் கழித்து மீண்டும் அங்குச் சென்றபோது அவற்றின்மேல் வெண்கண்ணம் பூசப்பட்டு அந்த ஓவியங்கள் முழுவதும் மறைந்துவிட்டன. திருப்பரங்குன்றம் திரும்பனப்பூர் விசயமங்கலம் முதலான கோயில் சுவர்களில் பழைய ஓவியங்களின் சிதைவுகள் இப்போதும் காணப்படுகின்றன.

மலைப்பாறையைக் குடைந்து அமைக்கப்பட்ட ஜைனக் குடைவரைக் கோயில் ஒன்றே ஒன்றுதான் தமிழ்நாட்டில் இருக்கிறது. அந்தக் குடைவரைக்கோயில் கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் காலத்தில் உண்டாக்கப்பட்டது. அது புதுக்கோட்டை மாவட்டத்தில் சித்தன்னவாசல் என்னும் இடத்தில் இருக்கிறது. அந்தக் குடவரைக் கோயிலுக்கு அறிவர் கோயில் என்று பெயர். அழகான அந்தக் குகைக் கோயிலில் சுவர்களிலும் தூண்களிலும் மண்டபத்தின் வேயாமாடத்து விதானத்திலும் பலவித ஓவியங்கள் எழுதப்பட்டு இந்திரன் மாளிகை போல இருந்தது. ஆனால், அந்தோ! அந்த எழில் மிக்க ஓவியங்கள் பிற்காலத்தில் பெரிதும் அழிக்கப்பட்டு மறைந்து போய்விட்டன. அந்தக் குகைக் கோயில் இடைக்காலத்தில் பாதுகாப்பு இல்லாமல் கிடந்தபோது ஆடுமாடு மேய்க்கும் இடையர், கலைக்களஞ்சியமாக இருந்த அந்தக் குகையைத் தங்களுக்குத் தங்கும் இடமாக்கிக் கொண்டனர். அந்தக் கலைக் கூடத்தில் அடுப்பு மூட்டி சோறு சமைத்தனர். அடுப்பிலிருந்து எழுந்த புகை வெளியே போக இடமில்லாமல் குகைக்குள் பரவி எழில்மிக்க ஓவியங்களில் படிந்து விட்டபடியால் ஓவியங்கள் மங்கி மழுங்கிப் போயின. கைக்கு எட்டிய வரையில் இருந்த ஓவியங்கள் அழிக்கப் பட்டன. இவ்வாறு தமிழ்நாட்டின் தலை சிறந்த ஓவியக் கலைச் செல்வங்கள் பெரும்பகுதி மறைந்து அழிந்துபோயின. தூண்களில் எழுதப்பட்டு இருந்த ஓவியங்கள் ஒளி மழுங்கி, வண்ணங்கள் அழிந்து புனையா ஓவியக் கோடுகளாகக் காட்சி அளிக்கின்றன. இந்த நிலையிலும் அந்த ஓவியங்கள் கண்ணைக் கவரும் வனப்பு வாய்ந்துள்ளன. நடனமாடும் எழில்மிக்க மங்கையரின் ஓவியங்களும், மணிமுடி தரித்த அரசன் அரசியரின் முக ஓவியங்களும் வண்ணம் இழந்து புனையா ஓவியமாகக் காட்சியளிக்கின்ற நிலையிலும் இவற்றின் சிற்பக்கலையின் செவ்வி மிளிர்கின்றது. மண்டபத்தின்

6