பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை

-

ஓவியம் - அணிகலன்கள் /247

பொருள்களையே ஓவியக்கலைஞர் சிற்ப உருவமாகவும், ஓவியப் பாடமாகவும் அமைத்துக் காட்டுவர். இவ்வகையில் இக் கலைஞர்கள் ஒத்துள்ளனர். ஆனால், சிலகருத்துக் களைக் கவிஞர் தங்கள் செய்யுட்களில் மட்டும் காட்ட முடியும். அக்கருத்துக்களை ஓவியக் கலைஞர் சிற்ப ஓவியங்களில் காட்ட முடியாது. சில கருத்துக்களை ஓவியக் கலைஞர் மட்டும் தங்களுடைய சிற்ப, ஓவியங்களில் நன்றாகக் காட்ட இயலும். இக்கருத்துக்களைக் கவிஞர் தம்முடைய கவிதையில் காட்டமுடியாது. எனவே கவிஞர் ஓவியர் ஆகிய இருவரிடையே கலைகளிலே மூன்று நிலைகளைக் காண்கிறோம். அவை:

1. கவிஞரும் ஓவியரும் தங்கள் தங்கள் கலைகளில் சில கருத்துக்களை எடுத்துக் காட்டுகிற சமமான நிலை.

2. சில கருத்துக்களைக் கவிஞர் மட்டும் தம்முடைய கவிதை களில் சிறப்பாகக் காட்டக் கூடிய சிறப்பான நிலை. (ஆனால், இக்கருத்துக்களை சிற்பிகளும் ஓவியரும் தங்களுடைய சிற்பத்திலும் ஓவியத்திலும் காட்டமுடியாது.)

3. சிற்பிகளும், ஓவியரும் சில கருத்துக்களைத் தங்களுடைய சிற்பத்திலும் ஓவியத்திலும் சிறப்பாகக் காட்டுகிற நிலை. (இவற்றைக் கவிஞர் தம்முடைய கவிதைகளில் காட்டமுடியாது.)

இந்த மூன்று நிலைகளை விளக்கிக்கூற இது இடமன்று. இந்தக் கட்டுரையிலே நான் விளக்கிக்காட்ட விரும்புவது சிலேடையைப் பற்றியாகும். சிலேடை என்பது இரட்டுற மொழிதல். அதாவது ஒரே சொல்லில் இரண்டு பொருள்களை (கருத்துக்களை) அமைப்பது. சிலேடை என்பது காவியப் புலவருக்கு (கவிஞர்களுக்கு) மட்டும் உரிய சிறப்பு அல்ல. ஓவியப் புலவருக்கும் சிலேடை உண்டு. கவிஞர் தம்முடைய கவிதைகளில் சொல்லைச் சிலேடையாக அமைத்துப் பாடுகிறார். ஓவியக்கலைஞர் தம்முடைய சிற்பங்களிலும் ஓவியப் படங்களிலும் சிலேடை அமைத்து (அதாவது ஒன்றை இரண்டாகவும் பலவாகவும் அமைத்துக்) காட்டித் தங்கள் கலைகளை அழகுபடுத்துகிறார்கள். இவற்றை விளக்குவோம். முதலில் உதாரணத்துக்காக மூன்று சிலேடைச் செய்யுள்களைக் காட்டுவோம்.

'வாரிக் களத்தடிக்கும் வந்து பின்பு கோட்டைப்புகும் போரிற் சிறந்து பொலிவாகும்-சீருற்ற