பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-13

செக்கோல மேனித் திருமலை ராயன் வரையில்

வைக்கோலும் மால்யானை யாம்’

இந்தச் செய்யுளில் சிலேடை இருக்கிறது. முதல் இரண்டு அடிகளில் சிலேடை காணப்படுகிறது. யானைக்கும் வைக்கோலுக்கும் சிலேடை கூறப்படுகிறது.! வைக்கோல் எப்படி யானையாகும்? யானை எப்படி வைக்கோலாகும்?

திருமலை ல ராயனுடைய மலைநாட்டில் யானையும் வைக்கோலும் ஒன்றாம். எப்படி? நெற்கதிர்களையுடைய தாள்களை அறுத்துக் கொண்டு போய்க் களத்தில் போட்டு அடிக்கப்படுகிறது. களத்தில் அடித்து உதிர்ந்த நெல் கோட்டையில் (நெல் சேமிக்கும் இடம்) கொண்டுபோகப்படுகிறது. எஞ்சிய தாள் (வைக்கோல்) போராகக்

குவிக்கப்படுகிறது.

யானை போர்க்களத்தில் சென்று பகைவரோடு போர் செய்து வீரர்களை வாரி எடுத்து அடித்துக் கொல்கிறது. போர் முடிந்த பிறகு கோட்டைக்குள் போகிறது. இவ்வாறு போர் செய்யப் பழகிய யானை போர் செய்வதில் சிறந்துவிளங்குகிறது. இவ்வாறு புலவர் சொல்லில் சிலேடையமைத்துப் பாடுகிறார். இதைப் படிக்கும் போது வியப்பும் உவகையும் தோன்றுகின்றன.

இன்னொரு சிலேடையைக் காட்டுவோம். கலசைச் சிலேடை வெண்பாவில் ஒரு செய்யுள் இது. கலசை என்பது ஒரு ஊர்.

“நாவலர்தம் புத்திரரும் நண்ணும் பிரமரமும்

காவியங்கள் ஆயும் கலசையோ

99

என்பது இதன் முதல் இரண்டடிகள். நாவலருடைய பிள்ளை களும் தேன் வண்டுகளும் காவியங்களை ஆராய்கின்றனர் என்பது இதன் பொருள். தேன்வண்டுகள் (பிரமரங்கள்) காவியம் ஆராயுமோ? காவியம் என்பதைத் தனிச் சொல்லாகக் கொண்டால் காவிய நூல்கள் என்பது பொருளாகும். இச்சொல்லைக் காவி+அம்+கள் என்று பிரித்துப் பொருள் கொண்டால் காவி - நீலோற்பலமலர் என்றும், அம்கள் அழகான தேன் என்றும் பொருள் காணலாம். வண்டுகள் நீலோற்பல மலரிலுள்ள தேனை ஆராய்ந்து பார்த்துக் குடிக்கின்றன என்பது பொருள். இதில் காவியங்கள் என்பதில் சிலேடை (இருபொருள்) அடங்கியுள்ளன.

-