பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை

-

ஓவியம் - அணிகலன்கள் /249

சிங்கைச் சிலேடை வெண்பாவிலும் ஒரு செய்யுள் காட்டுவோம்.

66

‘மாலைக்குழல் மடவார் வார் விழியும் மாளிகையும் சேலைக்கொடி திகழும் சிங்கையே'

என்பது இச்செய்யுளின் முதல் இரண்டு அடிகள் இதில் ‘சேலைக் கொடிதிகழும்' என்பது சிலேடை. மாலைகளைக் கூந்தலில் அணிந்த மகளிர் நீண்ட விழிகள்(கண்கள்) சேலைக் கொடி திகழ்கின்றன. (சேலை - சேல் மீன்களை, கொடிது + இகழ்கின்றன கொடுமையாக இகழ்கின்றன) அதாவது நீரில் வாழும் சேல்மீன்கள் நீரில் பளிச்சுப் பளிச்சென்று மின்னுவதுபோல், மகளிர் கண்களும் மின்னுவதனால் சேல்மீன்களை இகழ்வதுபோல் இருக்கின்றன. மாளிகைகளின் மேலே கொடிமரத்தில் நீண்ட சேலைக்கொடிகள் பறந்து திகழ்கின்றன. (சேலைக்கொடி + திகழும்) இதில், 'சேலைக் கொடிதிகழும்' என்னும் சொல் சிலேடையாக அமைந்துள்ளது.

இவ்வாறு சிலேடைச் செய்யுட்கள் தமிழில் பல உள்ளன. சிலேடைச் செய்யுட்களைப் படிக்கும்போது உவகையும் மகிழ்ச்சியும் தோன்றுகின்றன.

கவிஞர் சிலேடைச் சொல்லை அமைத்து (இரண்டு பொருளைத் தருகிற சொல்லை அமைத்துச்) சிலேடைச் செய்யுள் அமைப்பது போலவே ஓவியக் கலைஞரும் சிற்பங்களிலும், ஓவியப் படங்களிலும் சிலேடையமைத்து (ஒரே சிற்பத்தில் இரண்டு உருவம் காணும்படி அமைத்துச்) சிற்பங்களையும் ஓவியங்களையும் அமைக்கிறார்கள். சிற்ப ஓவியங்களை ஆராய்கிறவர்களுக்குத்தான் இது தெரியும். இது பலருக்கு வியப்பாக இருக்கும். ஓவியத்திலும் சிலேடை உண்டு. இங்கு மூன்று சிற்ப ஓவியச் சிலேடைகளைக் காட்டுவோம்.

களிறேறு

இந்தச் சிற்பம் அல்லது ஓவியம் புதுமையாகத் தோன்றுகிறது. இதற்குக் களிறேறு அல்லது யானைப் போத்து என்று பெயர் கூறலாம். (களிறு- - யானை, ஏறு - எருது, யானை -களிறு, போத்து - எருது) இந்தச் சிற்ப உருவத்தை நம்முடைய கோயில்களிலுள்ள கற்றூண்களில் காணலாம். சிற்பக் கலைஞர் அல்லது ஓவியக் கலைஞர் இதில் தம்முடை கைவன்மையைக் காட்டியுள்ளனர். வலதுபக்கத்தில் யானையின் உடம்பு காணப்படுகிறது. இடது பக்கத்தில் எருதின் உடம்பு