பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

தமிழகக் கலை வரலாறு : இசை ஓவியம்

ஓவியம் - அணிகலன்கள்

25

“அகரமுதல் னகர விறுவாகிய முப்பதும், சார்ந்து வரன் மரபினவாகிய மூன்றும் என்னும் முப்பத்து மூன்று எழுத்துக்களைத் தொழிற்படுத்துதலினாலே இயற்றமிழானது, பொருள் பொதிந்த சொற்களை ஆக்கி, அவை கருவியாகப் பார காவியங்களையும், நீதி நூல்களையும் வகுத்து. இம்மை மறுமைப் பயனளிக்கின்றது.

“ச ரி க ம ப த நி என்னும் ஏழு ஒசைகருவியாக இசைத் தமிழானது ஏழ்பெரும் பாலைகளை வகுத்து, அவை நிலைக்களமாக நூற்று மூன்று பண்களைப் பிறப்பித்து, அவை தமது விரிவாகப் பதினோராயித்துத் தொண்ணுற்றொன்று என்னுந் தொகையினவாகிய ஆதியிசைகளை யமைத்து, இம்மை யின்பமும், தேவர்ப் பரவுதலா னெய்தும் மறுமையின்பமும் பெறுமாறு செய்கின்றது.

66

“நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்னும் மெய்ப்பாடுகளை நிலைக்களமாகக் கொண்டு, உள்ளத் துணர்வினாலும், உடலுறுப்பினாலும், மொழித் திறனாலும், நடையுடையினாலும் அவை தம்மைத் தொழிற்படுத்தி, இருவகைக் கூத்து, பத்துவகை நாடகம் என்னுமிவற்றைத் தோற்று வித்து, நாடகத் தமிழ் உள்ளத்திற்கு உவகை யளிக்கின்றது.

"நேர் கோடு, வட்டம், முக்கோணம் ஆகிய மூன்று மூல வடிவங்களினின்று தோன்றிய உருக்கள் எண்ணிறந்தன.

66

இவ்வாறு ஆராயுமிடத்துக், கண்ணினாலும் செவியினாலும், உள்ளத்தினாலும் உணர்ந்து இன்புறற்பாலவாய் அழகுக்கலை யுருக்களெல்லாம் ஒருசில மூலவுருக்கள் காரணமாகத் தோன்றி நின்றன வென்பது தெளிவாகின்றது.

66

உருக்களை ஆக்கிக் கொள்ளும் முறையினைக் கூறும் நூல்கள் பொது வியல்புகளை வகுத்துக் காட்டுவன. புலவன். இசையோன், கூத்தன், ஓவியன் என்று இன்னோர், தமது சொந்த ஆற்றலினாலே. நுண்ணிய விகற்பங்களைத் தோற்றுவித்துச் செம்மை நலஞ் சான்ற உருக்களைப் பெருக்குதலினாலே அழகுக் கலைகள் விருத்தியடைகின்றன.

"இவ்வாறு நோக்குமிடத்துப், புத்தம் புதிய உருவங்களைப் படைத்துத் தருதலே கவிஞர் முதலிய அழகுக் கலையோர் இயற்றுதற் குரிய அருந்தொழில் என்பது புலனாகின்றது. மரபு பட்டு வந்த